விஜயகுமார் மகள் வனிதா கேவலமாக பேசிய டைரக்டர் ரவீந்தருக்கு செக் வைத்து ட்விட்டரில் பதிலடி கொடுத்தாரா?

 ஒன்றா… இரண்டா… மூன்றா… என்று விரல் விட்டு எண்ணக் கூடிய நிலைமையில் வனிதா தனது திருமண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்ற இந்த நிகழ்வினை பார்த்து இந்த டைரக்டர் அதை கடுமையாக விமர்சித்து உள்ளார். இது விமர்சனமாக  மட்டும் இல்லாமல் மிகவும் கேவலமாகவும் கேலிக்குரியதாக இருந்தது.

 இந்த தயாரிப்பாளர் வேறு யாரும் இல்லை. இவர் தான் ரவீந்திரன், சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கிறார்.

தற்போது சீரியல் நடிகையான மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்தது அனைவருமே தெரியும். திருமணத்தைப் பற்றி சில கேள்விகள் எழுந்தபோது  அவற்றை சமாளிப்பதற்காக மகாலக்ஷ்மி தாங்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும் அதன் பின் நிதானமாக எடுத்த முடிவினால் தான் இந்த திருமணம் நடந்ததாக கூறியிருக்கிறார்.திருப்பதியில் நடந்த இவரது திருமண போட்டோக்கள்  சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி கிடக்கிறது.

 பீட்டர் பால்லை திருமணம் செய்தபோது கடுமையாக விமர்சித்த இவர்  எப்படி மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்ளலாம். இது நிஜ திருமணம் தானா ? அல்லது மிரட்டி நடந்ததா என்பது போன்ற கோணங்களில் பல விதமான கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருக்க அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டைரக்டர் ரவீந்தர் பதிலளித்துள்ளார்.

 வனிதா பீட்டர் பால்லை திருமணம் செய்யும்போது பீட்டர் பால் விவாகரத்து செய்யவில்லை. அவர் மனைவியும் அவர் மேல் புகார் கொடுத்திருந்தார். ஆனால் எங்கள் நிலை அப்படியல்ல  தனது செயலுக்கு விளக்கமளித்துள்ளார்.

நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில்  இந்தத் திருமணத்தை பற்றி கூறும்போது முதலில் ஒருவர் எதைப் பற்றி பேசுகிறாரோ அது தனக்கு எப்படிப் பொருந்தும் என்பதை பார்த்து பேசவேண்டும் என்று கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் எப்போதும் தான் செய்யும் கர்ம பலன் ஒருவரை சும்மா விடாது.   இனியாவது அடுத்தவர்கள் வாழ்க்கையை பற்றி விமர்சிக்காமல் அவர்கள், அவர்கள் வாழ்க்கையில் அவர்களை பார்த்துக் கொண்டு செல்லுங்கள் என கூறியிருப்பது  அறிவுரை சொல்லுவது போல இருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …