தொகுப்பாளினி பிரியங்கா இதை செய்தாரா..? குண்டை தூக்கி போட்ட வனிதா விஜயகுமார்..!

வாரிசு நடிக்கையான வனிதா விஜயகுமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் அடிக்கடி பல்வேறு வகையான சர்ச்சைகளில் சிக்குவதோடு மட்டுமல்லாமல் வாயாடி வனிதா அக்கா என்ற பெயருக்கும் சொந்தக்காரியாக மாறி இருக்கிறார்.

இவர் தமிழ் திரையுலகில் சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து திரையுலகை விட்டு விலகி தற்போது தன் மகளை எப்படியும் ஹீரோயினியாக மாற்றி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்.

வனிதா விஜயகுமார்..

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த விஜயகுமாரின் மகளாகிய வனிதா பற்றி சர்ச்சை மிக்க கருத்துக்கள் அடிக்கடி இணையங்களில் வெளி வருவதற்கு அவருடைய செயல்களே காரணம் என்று சொல்லலாம்.

இந்நிலையில் திரைப்படங்களில் நடித்து போதுமான அளவு ரீச் அடைய முடியாத இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டதை அடுத்து மக்கள் மத்தியில் நல்ல பேமஸ் ஆனார்.

இதைத் தொடர்ந்து நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை ரிவ்யூ செய்து ரசிகர்களுக்கு தொகுத்து வழங்கி வரக்கூடிய இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிசினஸ் செய்து வரும் இவரிடம் எக்கத்தப்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலடியை போல்டாக கொடுத்து விடும் போல்ட் லேடி என்று சொல்லலாம்.

யாரைப் பற்றி எதுவும் கவலைப்படாமல் தனது மனதில் பட்டதை ஓபனாக சொல்லுவதாலேயே இவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு உள்ளது என்று சொல்லலாம். மூன்று முறை திருமணம் செய்து கொண்டும் மன வாழ்க்கை நிலைக்காமல் தற்போது தனது மகளோடு தனித்து வாழ்ந்து வருகிறார்.

நீ பார்த்தியா.. விஜே பிரியங்கா என்ன கிண்டல் பண்ணாங்களா?

இந்நிலையில் பேட்டி ஒன்றில் வனிதா விஜயகுமாரிடம் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக திகழும் பிரியங்கா உங்களை கிண்டல் செய்தார்களா? என்ற கேள்வி வைக்கப்பட்டது.

இந்தக் கேள்வியை கேட்டதுமே தன் பாணியில் வனிதா விஜயகுமார் அவங்க என்ன கிண்டல் பண்ணத நீங்க பாத்தீங்களா? என்று துடுக்குத்தனமான அடுத்த கேள்வியை முன் வைத்ததோடு மட்டுமல்லாமல் இன்று இருக்கக் கூடிய காலகட்டத்தில் நல்ல உறவுகள் கிடைப்பது சற்று குறைவு என்று சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் வனிதா விஜயகுமாருக்கும் விஜே பிரியங்காவிற்கும் இடையே ஒரு நல்ல உறவு இருப்பதாகவும், இருவரும் அக்கா, தங்கைகளைப் போல பழகி வருவதாகவும் சொல்லி இருக்கக் கூடிய இவர் பிரியங்கா பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது இணையம் முழுவதும் வேகமாக பரவி வனித விஜயகுமாரின் பேச்சானது ட்ரெண்டிங்கான பேச்சில் ஒன்றாக மாறிவிட்டது.

வனிதா விஜயகுமாரின் அடாவடி பேச்சு..

யாருமே எதிர்பார்க்காத படி பிரியங்காவை பல்வேறு ஆங்கிலில் திட்டி தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேள்விக்கு பக்குவமான முறையில் பதில் அளித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டு அடாவடி அக்காவுக்குள் இப்படி ஒரு சாப்ட் ஹார்டா என்று ஆச்சரியம் அடைந்து விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் பேசும் பொருளாகி விட்டதோடு மட்டுமல்லாமல் இணையதள வாசிகள் மத்தியில் பட்டிமன்றம் போட்டு பேசக்கூடிய அளவு பிரபலமான பேட்டியாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version