கிண்டல் செய்த வனிதா.. திருமண விஷயத்தை வச்சி பதிலடி கொடுத்த பிரியங்கா தேஷ்பாண்டே..!

பெண்களைப் பொறுத்தவரை ஒருவர் ஒருவர் மட்டம் தட்டிக் கொள்வதில் சலித்தவர்களே அல்ல. ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஒரு பொது இடத்தில் ஏதேனும் ஒரு வகையில், மட்டம் தட்டி பேசினால் அதற்கு உடனுக்குடன் சூட்டோடு சூடாக பதிலடி தராவிட்டால் அந்த பெண்ணுக்கு தூக்கமே வராது.அந்த வகையில், தான் இந்த தரமான சம்பவம் நடந்திருக்கிறது.

வனிதா விஜயகுமார்

பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்பதைப்போல, அவர் ஒரு வாயாடி என்பதும் வம்புக்காரர், எந்த இடத்தில் எதையும் துணிச்சலாக பேசக் கூடியவர் என்பதும் ஊரறிந்த விஷயம்தான்.

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதி விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். ஏற்கனவே நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து, சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார். பிறகு ஆனந்த் என்பவரை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தார். பிறகு பீட்டர் பால் என்பவரையும் திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்தார்.

இதுவரை 3 திருமணங்கள் செய்து, விவாகரத்து செய்துள்ள வனிதா விஜயகுமார் தொடர்ந்து அடுத்த திருமண சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

தமிழ்நாட்டுக்கே போஸ்டர் அடித்து ஒட்டுவேன்

இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது, அவரிடம் சிலர் வனிதாவின் அடுத்த திருமணம் பற்றியே கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதற்கு அது நடக்கும்போது நடக்கும், அடுத்த திருமணம் நடந்தால் தமிழ்நாட்டுக்கே போஸ்டர் அடித்து ஒட்டச் சொல்லிவிடுவேன் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ஏற்கனவே வனிதா 3 திருமணங்கள் செய்தவர். இப்போது அவரது மகள் ஜோவிகாவே, திருமணம் செய்யும் வயதில்தான் வளர்ந்த பெண்ணாக இருக்கிறார்.

அப்படி இருக்கும்போது நான்காவது திருமணம் செய்து கொள்ள இவர் தயாராகி வருவது பலருக்கும் கடும் அதிருப்தியை, வனிதா விஜயகுமார் மீது வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குக் வித் கோமாளி சீசன் 5

இந்நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளியில் பங்கேற்ற வனிதா விஜயகுமாரை பங்கம் செய்திருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. தேவையில்லாமல் வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் கலந்து கொண்டார். கடந்த வாரத்தில் குக்குகளுக்கு தரப்பட்ட டாஸ்க்குகள் குறித்து பேசுவதற்காக அவர் வந்திருக்கிறார். அவருடன் நடிகை வித்தியுலேகா என்பவரும் கலந்து கொண்டு குக்குகளிடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் விதிமுறைகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

 

சாப்பாடு பத்திரம்

அப்போது இந்த 5 சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்ட பிரியங்காவை பார்த்ததும், நீங்க சமைக்கிறது எல்லாம் சரிதான். ஆனால் சமைச்ச சாப்பாட்டை எல்லகாம் பிரியங்காவிடமிருந்து காப்பாற்றுவது உங்கள் வேலை, சாப்பாடு பத்திரம் என்று சொல்லி விட்டார்.

கல்யாண சாப்பாடு எப்போது?

உடனே சுதாரித்துக்கொண்ட பிரியங்கா சட்டென்று, இவங்க சமைக்கிற சாப்பாடு இருக்கட்டும். நீ எப்போ அக்கா கல்யாண சாப்பாடு போட போறே? என்று கேட்க, அதற்கு ஒருவழியாக சிரித்து சமாளித்திருந்தார்.

அதாவது ஏற்கனவே 3 கல்யாணம் பண்ணீட்டு, அடுத்து 4வது கல்யாணத்துக்கு தயார் என்று சொல்கிற நீங்கள் எல்லாம் என்னை கிண்டல் பண்றிங்களா என்பது கேட்பது போல, உன் திருமண சாப்பாடு எப்போ அக்கா என, சட்டென வனிதாவிடம் கேட்டு நோஸ்கட் செய்துவிட்டார் பிரியங்கா.

என்னை மட்டம் தட்டினால்…

பிரியங்காவிடம் சாப்பாடு பத்திரம் என கிண்டல் செய்த வனிதாவை, திருமண விஷயத்தை வச்சி பதிலடி கொடுத்திருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. என்னை மட்டம் தட்டினால், யாராக இருந்தாலும் அவ்ளோதான் என்பது போல இந்த தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version