News

அம்மா வனிதாவை Insult செய்த அவரது மகன்.. என்ன இப்படி சொல்லிட்டாரு..!

Published on

தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து கலக்கிய நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் நடித்து பெரிய வெற்றியை தராதவர்.

இவர் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவருக்கு ஸ்ரீஹரி பிறந்தார். இதனை அடுத்து இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.

நடிகை வனிதா விஜயகுமார்..

இந்நிலையில் தன் மகன் யாரோடு இருக்க வேண்டும் என்பது குறித்து ஒரு மிகப்பெரிய கட்டப்பஞ்சாயத்து நடந்தது. இதனை அடுத்து கோர்ட் தீர்ப்பின் மூலம் ஸ்ரீஹரி அவரது தந்தை ஆகாஷின் கண்காணிப்பில் வளர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இந்த நடிகையை பார்த்தாலே மூடு ஆகிடுது.. வெக்கமின்றி கூறிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

தன் மகன் தன்னோடு வளரவில்லை என்றாலும் மகள் ஜோவிகா உடன் தனித்து வசித்து வரும் வாயாடி அக்கா வனிதா பிக் பாஸ் மூலம் பிரபலமான விஷயம் உங்களுக்குத் தெரியும். இதனை அடுத்து பல பேட்டிகளை youtube சேனல்களுக்கு தந்து பரபரப்பாக பேசக்கூடிய நபராக மாறுவார்.

அத்தோடு பிக் பாஸ் சீசனை ரிவ்யூ செய்து மக்கள் மத்தியில் வெளியிட்டு தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்து கொண்டதோடு மட்டுமல்லாமல் வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வார்.

அம்மாவை இன்சல்ட் செய்த ஸ்ரீஹரி..

அந்த வகையில் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி பதில் பக்கத்தை புதிதாக ஓப்பன் செய்திருக்கக் கூடிய வனிதா அக்காவிடம் ரசிகர்கள் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

அந்த வகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நறுக்கு என்று பதில் அளித்து இருக்கும் வனிதா அக்கா தனக்கு அடுத்த திருமணம் எப்போது என்று கேட்டதற்கு எதிர்பார்த்து காத்திருங்கள், விரைவில் அதற்கு உரிய விடை கிடைக்கும் என்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பொசுக்குன்னு இப்படியா சொல்லணும்..

மகள் ஜோவிகா எந்த அளவுக்கு வளர்ந்து ஆளாகி இருக்கிறாரோ அதே போல தன்னுடைய மகன் ஸ்ரீஹரியும் ஹீரோ போல வளர்ந்து இருக்கிறார். 21 வயரை எட்டிப் பிடித்திருக்கும் விஜய் ஸ்ரீஹரியின் பிறந்தநாளுக்கு அண்மையில் அவர் அம்மா வனிதா விஜயகுமார் வாழ்த்துக்களை தெரிவிக்கக் கூடிய வகையில் ஒரு போஸ்டை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் விஜய் ஸ்ரீஹரியின் ரசிகர் ஒருவர் அந்த போஸ்டை பார்த்து வனிதா தான் உங்க அம்மாவா? என்ற கேள்வியை எழுப்பியதை அடுத்து விஜய் ஸ்ரீஹரியின் ரியாக்ஷன் எப்படி இருந்தது தெரியுமா?. விஜய் ஸ்ரீஹரி தனது அம்மாவை இன்சல்ட் செய்யக்கூடிய விதத்தில் ஆகாஷ் தான் என்னுடைய அப்பா என்ற பதிலை பதிவு செய்தார்.

ஏற்கனவே வனிதாவின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தால் தான் குடும்பமே அவரை ஒதுக்கி வைத்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவரது தங்கை ப்ரீத்தா விஜயகுமாரும் தனது அக்காவின் செயல்பாடு முகம் கூளிக்ககூடிய அளவு உள்ளதாக தனது கருத்துக்களை வெளியிட்டு இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதையும் படிங்க: நிஜமாவே கீழ ஏதாச்சும் போட்டு இருக்கீங்களா..? வாரிசு பட நடிகையை Zoom பண்ணி பாக்கும் நெட்டிசன்ஸ்..!

இதனைத் தொடர்ந்து வனிதா பெற்ற மகனும் அவரை இன்சல்ட் செய்யக்கூடிய வகையில் ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் வனிதாவின் இமேஜை டேமேஜ் செய்யக்கூடிய வகையில் உள்ளது.

வேறு சில ரசிகர்களும் இதைப் பற்றி பேசும் போது பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதை ஸ்ரீஹரி நிரூபித்து இருப்பதாக வனிதாவிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு பலரும் பட்டிமன்றம் போட்டு பேசக்கூடிய விஷயமாக மாறிவிட்டது.

Ocean
Exit mobile version