கதவை சாத்திக்கிட்டு ரூம் உள்ளே இதை பண்ணுவா.. வீட்ல எல்லாருக்குமே தெரியும்.. வனிதா கூறிய பகீர் தகவல்…

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகராக இருப்பவர் விஜயகுமார். ஆரம்ப காலத்தில் ஹீரோவாக நடித்தவர், ஒரு கட்டத்தில் வில்லன் கேரக்டர்களிலும் நடித்தார். அதன்பிறகு குணச்சித்திர நடிகராகவும் விஜயகுமார் மாறினார்.

குறிப்பாக ஹீரோயின் தந்தை, ஊர் நாட்டாமை, போலீஸ் அதிகாரி, தொழில் அதிபர், ஏழை விவசாயி கேரக்டர்களில் தனது அனாயசமான நடிப்பை விஜயகுமார் அற்புதமாக வெளிப்படுத்துவார்.

விஜயகுமார்

நாட்டாமை, நட்புக்காக, பாரதி கண்ணம்மா, மலபார் போலீஸ், முதல்வன், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வௌிப்படுத்தி இருப்பார் விஜயகுமார். நந்தினி என்ற டிவி சீரியலிலும் அவர் நடித்திருந்தார்.

நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு என்ற முதல் மனைவியும், மஞ்சுளா என்ற 2வது மனைவியும் இருந்த நிலையில், முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் அனிதா, கவிதா மற்றும் அருண் விஜய்.

அடுத்து 2வது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர். விஜயகுமாருக்கு மொத்தம் 5 பெண்கள் மற்றும் அருண்விஜய் என்ற மகன் இருக்கிறார்.

பேத்தி திருமணம்

இந்நிலையில் மூத்த மனைவியின் மகளான அனிதாவின் மகள், விஜயகுமாரின் பேத்தி தியா திருமணம் சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

ஆனால் இந்த திருமணத்துக்கு வனிதா விஜயகுமாருக்கு அழைப்பில்லை. அவரும் செல்லவில்லை. ஆனால், இந்த திருமணத்தில் வனிதாவின் உடன்பிறந்த சகோதரிகள் ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ப்ரீத்தா, இயக்குநர் ஹரியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் படங்களில் நடிக்கவில்லை. ஸ்ரீதேவி, குழந்தை நட்சத்திரமாக ரிக்‌ஷாமாமா படத்தில் நடித்திருந்தார்.

தேவதையை கண்டேன்

பிறகு பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற படங்களில் நடித்தார். பிறகு சமீபமாக அவர் படங்களில் நடிப்பது இல்லை.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட வனிதா விஜயகுமார், தனது தங்கை ஸ்ரீதேவி குறித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவர் கூறுகையில், ஏதாவது குறும்பு செய்தால், சண்டை வந்தால் நான்தான் எங்க அம்மாவிடம் அதிகமாக அடி வாங்குவேன்.

சின்ன வயதில் இருந்தே, என்ன தப்பு செய்தாலும் ஸ்ரீ பாப்பா (ஸ்ரீதேவி) மட்டும் தப்பித்து விடுவாள்.

கதவைப் பூட்டிக்கொண்டு…

ஏதாவது செய்து விட்டால், அவளே வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வாள்.

சின்னதம்பி படத்தில் வரும் குஷ்பு போல், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் தூக்கிப் போட்டு உடைத்து விடுவாள்.

ஏதாவது செய்து விடுவாளோ..

இதனால் வீட்டில் உள்ள அனைவருமே இவளுக்காக பயந்து விடுவர். இவளை ஏதாவது சொன்னால் ஏதாவது செய்து கொள்வாளோ என்று எல்லாருமே பயந்து இருப்பார்கள். அதனால் அவளை எதுவுமே, யாருமே சொல்ல மாட்டார்கள்.

அந்த மாதிரி நடித்து, எல்லோரையும் பயம் காட்டி வைத்திருந்தாள் என்று கூறியிருக்கிறார் அவரது சகோதரியான நடிகை வனிதா விஜயகுமார்.

கதவை சாத்திக்கிட்டு ரூமுக்கு உள்ளே பொருட்களை உடைத்து கலாட்டா பண்ணுவாள். அவள் இப்படிதான் பிரச்னை செய்வாள் என்று வீட்ல எல்லாருக்குமே தெரியும்.

அதனால் அவள் குறும்பு செய்தாலும் யாரும் கண்டுக்க மாட்டார்கள் என்று வனிதா விஜயகுமார் தன் தங்கை ஸ்ரீதேவி குறித்து, பலரும் அறியாத ஒரு தகவலை இதில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version