அருண் விஜய் மாட்டப்போறாரு பாருங்க.. நடிகை வனிதா விஜயகுமார் வெளியிட்ட தகவல்..!

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, அஜித் ஆகிய மூன்று நடிகர்களும் வளர்ந்து வந்த காலகட்டங்களில் அவர்களைப் போலவே அதிக வரவேற்பு பெற்று வளர்ந்து வந்த ஒரு நடிகர்தான் நடிகர் அருண் விஜய். 1995இல் வெளியான முறை மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக இவர் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதற்கு பிறகு பிரியம், காத்திருந்த காதல் என்று நிறைய படங்களில் நடித்தார். அவர் நடித்த திரைப்படங்கள் அதிகபட்சம் காதல் கதைகளை கொண்டிருந்தன. இந்த திரைப்படங்கள் விஜய், அஜித், சூர்யா திரைப்படங்கள் அளவிற்கு வரவேற்பை பெறாமல்தான் இருந்தன.

ஆனால் 2001 ஆம் ஆண்டு அவர் நடித்த பாண்டவர் பூமி என்கிற திரைப்படம் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை தாண்டிய ஒரு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் நடித்த இயற்கை திரைப்படம் அருண் விஜய்யை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு சென்றது என்று கூற வேண்டும்.

அருண் விஜய் திரைப்படங்கள்:

தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் அருண் விஜய்  இந்த நிலையில் தடையற தாக்க திரைப்படம் திரும்பவும் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து என்னை அறிந்தால் செக்கச் சிவந்த வானம், தடம் என்று இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே ஹிட் திரைப்படங்களாக அமைந்தன.

திரும்பவும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் அருண் விஜய். சமீபத்தில் அவர் நடித்து வெளியான மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம் வெகுவான வரவேற்பை பெற்றது. ஆனால் பெரிய படங்களுடன் சேர்ந்து வெளியானதால் அந்த திரைப்படம் அப்பொழுது வசூல் ரீதியாக சாதனையை படைக்கவில்லை.

இந்த நிலையில் அருண் விஜய்க்கும் நடிகை வனிதாவிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்று தெரிகிறது. நடிகை வனிதா பேட்டிகளில் நிறைய அவரது குடும்பத்தை குறித்து விமர்சனங்கள் அளித்து வந்திருக்கிறார்.

வனிதாவுடன் பிரச்சனை:

இதனை தொடர்ந்து அருண் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது ”எனது தந்தை விஜயக்குமாரை பற்றி எல்லாம் வனிதா விமர்சித்து பேசுகிறார். இதை அவர் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பேட்டி கொடுத்திருந்தார் அருண் விஜய்.

இந்த நிலையில் இது குறித்து பேசிய வனிதா விஜயகுமார் பேட்டிகள் பேசும் பொழுது ”அருண் விஜய் இப்ப மாட்ட போறாரு பாருங்க ஒரு பிரபலத்தின் இரவு விருந்தில் ஒன்றில் அருண் விஜய் கலந்து கொண்டார். அதை போலவே ஒரு பொது இடத்தில் அவர் இருந்த பொழுதும் நான் அவரை பார்த்தேன்.

தொடர்ந்து இருமுறை அவரை நான் நேரடியாக பார்த்தேன். அதற்கு முன்பும் நிறைய திருமணங்களுக்கு எல்லாம் அவர் வந்திருக்கிறார் ஆனால் நான் இருக்கிறேன் என்று தெரிந்ததும் என்னை பார்க்காத மாதிரி சென்று திருமணத்தை முடித்துவிட்டு கிளம்பி போய்விடுவார்.

இதேபோல அந்த குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளில் செய்தார் ஆனால் அப்பொழுது என்னால் அவரை பார்க்க முடிந்தது. ஒரு காலகட்டத்தில் என்னுடன் மிகவும் நெருக்கமான ஒரு அண்ணனாக இருந்தவர் அருண் விஜய் அப்படிப்பட்ட அருண் விஜய் இப்பொழுது இப்படி விலகுவது வருத்தம் அளிக்கிறது என்று கூறியிருந்தார் வனிதா விஜயகுமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version