தமிழ் திரையுலகில் நாட்டாமையாக வந்து கலக்கிய நடிகர் விஜயகுமாரின் இளைய தாராத்து மகளான வனிதா விஜயகுமார் தமிழ் திரையுலகில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.
சந்திரலேகா என்ற படத்தில் நடித்த இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்ற போதும் போதிய அளவு பெயரையும் புகழையும் அடையாத காரணத்தால் அடுத்தடுத்து புதுமுக நடிகைகளின் வரத்து இவருக்கு இவரது மார்க்கெட்டை டல்லாக்கியது.
நடிகை வனிதா விஜயகுமார்..
இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு திரைப்படத்தில் அடைந்த பேமஸை விட அதிக அளவு ரசிகர்களை பெற்றார்.
பல்வேறு பிசினஸ்களை செய்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை ரிவ்யூ செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று இடத்தை பிடித்துக் கொண்டார்.
மேலும் இவருக்கும் இவரது அப்பாவிற்கும் ஏற்பட்ட சண்டைகள் குறித்தும் சொத்து பிரச்சனை குறித்து இவரது சகோதரிகள் பேசியது அண்மையில் கூட இணையங்களில் வைரலாகி இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்
ஆமா எனக்கு நான்கு புருஷன் தான்..
மேலும் பிக் பாஸ் சீசன் 7-ல் தனது மகள் ஜோவிகாவை போட்டியாளராக களம் இறக்கியதை அடுத்து அவரை ஹீரோயினியாக மாற்றக்கூடிய முயற்சிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் திரைப்படங்களில் நடிக்கும் போதே சீரியல்களில் நடித்த ஆகாஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
இதில் பெண் குழந்தையை இவரும் ஆண் குழந்தையை இவரது முன்னாள் கணவரும் வளர்த்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இவர் டான்ஸ் மாஸ்டர் ராபட்டை காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற விஷயங்கள் வெளி வந்த போதும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்நிலையில் தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டும் அந்த மண வாழ்க்கை செட்டாகாததால் விவாகரத்து பெற்ற இவர் பீட்டர் பாலை காதலித்தார்.
மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்ட இவர் அவரை விட்டு பிரிந்து தற்போது தனித்து வாழ்ந்து வரும் நிலையில் பீட்டர் பாலும் இயற்கை எய்தினார்.
பிரபல நடிகையை கிழித்த வனிதா..
இந்த சூழ்நிலையில் வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட போது தன்னுடைய கணவருக்கு தான் பெற்ற மகள் முன்பு லிப்லாக் முத்தம் கொடுத்து மது அருந்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது.
இந்நிலையில் பிரபல நடிகையும் இயக்குனருமான சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக பேசி இருந்தார்.
இதனை தொடர்ந்து ஆமா.. எனக்கு 4 புருஷன் தான்.. உன் கதையை அவுத்து விடவா.. என்று பேசினார் வனிதா விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நான்காவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றன.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று தன்னுடைய நான்காவது திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர்கள் ஊருக்கு பதில் அளித்து இருந்தார் வனிதா விஜயகுமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.