இந்த கோயில் எங்கு உள்ளது என தெரிந்து கொள்ள விருப்பமா?
இந்த கோவில் ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் என்னும் ஊரில் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் எனும் பெயரில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சித்தூரில் இருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காணிப்பாக்கம் என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. காணிப்பாக்கத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் சிறப்புகள்
இத்தலத்தில் விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இத்தலமும் ஒன்று.
காணிப்பாக்கம் விநாயகர் பெருமானை ஆந்திர மாநில மக்கள் தங்களின் நீதி தேவனாக கருதி வழிபடுகின்றனர்.
இதற்கு காரணம் இக்கோயிலில் தினமும் மாலை ‘சத்திய பிரமாணம்” நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இங்கு நடைபெறும் சத்திய பிரமாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விநாயகர் முன் சத்தியம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது.
பொய் சத்தியம் செய்பவர்கள் காணிப்பாக்கம் விநாயகரால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது இங்கு வரும் பக்தர்கள் பலரின் அனுபவமாக இருக்கிறது.
வேறென்ன சிறப்பு?
இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டது.
வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
ஆந்திர மாநில மக்கள் அதிகளவில் வந்து வழிபடும் ஒரு கோயிலாக காணிப்பாக்கம் விநாயகர் கோயில் இருக்கிறது.
திருவிழாக்கள்
விநாயகர் சதுர்த்தி, ஆங்கில புத்தாண்டு போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனைகள்
இத்தலத்தில் நாகர் சன்னதி இருக்கிறது. இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது
விநாயகருக்கு பால் அபிஷேகம், கணபதி ஹோமம் செய்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.