பில்லி சூனியத்தை விரட்டி அடிக்க : மூர்க்கமான தெய்வங்களின் வரிசையில் இருக்கக்கூடிய வராஹி அம்மனை வழிபடுவதற்கு கடுமையான நியதிகளை பின்பற்ற வேண்டியவது மிகவும் அவசியமான ஒன்று.
நீங்கள் நினைக்கக்கூடிய காரியம் எளிதில் வெற்றி அடையவும் குடும்பத்தில் சுபிட்சம் நிலவவும் வராஹி வழிபாடு உங்களுக்கு நன்மைகள் பலவற்றை தந்துவிடும்.
வராஹி வழிபாட்டு முறை:
வராகி அம்மனை வழிபடுவதற்காக நீங்கள் வராஹி அம்மனின் படத்தை உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பின்பு இந்த படத்தில் அம்மனின் முகம், கை, பாதம் போன்றவற்றில் மஞ்சள் சந்தனத்தை வைத்து விட்டு பூவினையும் போட்டு விடுங்கள்.
நீங்கள் சுத்தபத்தமாக அதுவும் உடல் சுத்தம் மற்றும் போதாது. மன சுத்தத்தோடு வராகியை மனமுருக வேண்ட வராஹி மந்திரத்தை தொடர்ந்து 108 முறை ஊத்தரிக்கவும்.
வராஹி மந்திரம்
வராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
வராஹியின் மூல மந்திரம் தெரியாதவர்கள் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மந்திரத்தை உச்சாடனம் செய்வதின் மூலம் நிச்சயமான பலன்களை நீங்கள் பெறலாம்.
மேலும் வராகிக்கு பிடித்தமான மாதுளை பழம், வெல்லம், புளியோதரை போன்றவற்றை நீங்கள் நெய்வேத்தியம் செய்வதின் மூலம் அம்மனின் மனது குளிர்ந்து நீங்கள் விரும்பியது விரைவில் தருவது உறுதி.
வீட்டில் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு இருக்கக்கூடிய குடும்ப நபர்கள் அனைவருமே வராகி வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய பலன்களில் இருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தற்காற் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மேலும் அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதியில் நீங்கள் அம்மனை செவ்வாய் தோறும் வணங்கி வந்தால் நன்மைகள் பல அடைய முடியும்.