கடத்தல் தொழில் செய்யும் கணவர்..? வரலட்சுமி கொடுத்த பதிலை பாருங்க..! அதிர்ந்து போன ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் எந்த ஒரு திரைதுறை பின்னணியும் இல்லாமல் தன் உழைப்பால் உயர்ந்த நடிகர் சரத்குமார் ரசிகர்களின் மத்தியில் சுப்ரீம் ஸ்டார் ஆக திகழ்ந்து வருகிறார். இவரது முதல் மனைவி சாயாவுக்கு பிறந்த மகள் வரலட்சுமி  திரையுலகில் சக்கை போடு போடும் நடிகையாக விளங்குகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு தனி இடத்தை திரையில் பிடித்து இருக்கும் வரலட்சுமி தற்போது 38 வயதை எட்டி இருக்கும் நிலையில் மும்பையில் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

நடிகை வரலட்சுமி..

பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் வில்லியாகவும் களம் இறங்கி கலக்கியவர். இவருக்கு என்று தனியாக தென்னிந்தியாவில் ரசிகர்கள் அதிகளவு இருப்பதோடு இவரது instagram பக்கத்தை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகளவு உள்ளது.

இந்நிலையில் நடிகை வரலட்சுமி நிக்கோலாய் குறித்து அண்மை பேட்டியில் ஓப்பனாக பேசி இருக்கிறார். இந்த பேச்சானது தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பரவி வருகிறது.

கடத்தல் தொழில் செய்யும் கணவரா?

இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற படம் வெளி வந்தது. இதை அடுத்து இவர் எதிர்பார்த்த அளவு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் தெலுங்கில் கொட்ட பொம்மிலி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிகர் விஷாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் நிக்கோலாயை திருமணம் செய்து கொள்ள பெரியவர்களால் நிச்சயதார்த்தம் செய்து முடிக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையங்களில் வைரலானது.

தனது வருங்கால கணவர் மும்பையில் ஒரு ஆர்ட் கேலரியை வைத்திருக்கிறார். இதில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்த தொழிலை இவரும் இவருடைய அப்பாவும் செய்து வருகிறார்கள்.

இவர் அப்பாவுக்கு பக்கவாதம் வந்து படுத்து விட்ட நிலையில் அந்தத் தொழிலை தனது 16 வயதிலிருந்து நிக்கோலாய் செய்து வருகிறார் என்று சொல்லி இருக்கிறார்.

விவகாரமான பதிலை கேட்டு அதிர்ந்த ரசிகாஸ்..

அது மட்டுமில்லாமல் ஆர்ட் கேலரி என்றால் கடத்தல் பொருட்களை விற்கக்கூடிய தொழில் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அங்கு கலைத்தன்மை நிறைந்த விலை உயர்ந்த பொருட்கள் விற்கப்படும்.

இன்னும் சிலர் இதனை கடத்தல் பொருள் என்றே நினைத்திருக்கிறார்கள். 14 வருடங்களாக நிக்கோலாவை தனக்கு தெரியும். இதனை அடுத்து தற்போது நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறோம்.

மேலும் எனது அப்பாவின் முன்பு தான் அவர் என்னை ப்ரபோஸ் செய்தார். இந்த விஷயத்தை சொன்னதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு நடிகர் சரத்குமாரின் மருமகன் கடத்தல்காரர் அல்ல. கலை நயம் மிக்க பொருட்களை விற்பனை செய்யக் கூடியவர் என்ற விஷயத்தை பேசி வருகிறார்கள்.

அத்தோடு இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு நடிகை வரலட்சுமியின் வருங்கால கணவரது தொழில் பற்றி ரசிகர்கள் அறிந்து கொண்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version