Site icon Tamizhakam

மோசமான கமெண்ட்.. வரலட்சுமி சரத்குமார் கொடுத்த அதிரடி பதிலடியை பாத்தீங்களா..?

தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவரின் முன்னால் மனைவிக்கு பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவரும் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இதையும் படிங்க: அப்பா கூட தப்பா சேத்து வச்சி.. சுயநலத்துக்காக அந்த நடிகை செய்த வேலை.. ஐஸ்வர்யா கூறிய பகீர் தகவல்..

தென்னிந்திய மொழிகளில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கு அண்மையில் தான் எங்கேஜ்மென்ட் முடிந்தது.

நடிகை வரலட்சுமி சரத்குமார்..

வரலட்சுமி சரத்குமார் மும்பையைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதை அடுத்து அவரது எங்கேஜ்மென்ட் படு விமர்சையாக நடந்து முடிந்தது. இதனை அடுத்து இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

இவர் மும்பையைச் சேர்ந்த அந்த நபருக்கு இரண்டாம் தாரமாக மாற இருப்பதோடு மட்டுமல்லாமல் 14 வயது சிறுமிக்கு சித்தியாக இருக்கக்கூடிய கதை இணையங்களில் வெளிவந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு இந்த நபரை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து டேட்டிங் செய்துள்ள விஷயமும் லீக் ஆனது.

இந்த சூழ்நிலையில் இவரது சோசியல் மீடியா பக்கத்தில் பலரும் நெகட்டிவ்வான கமாண்டுகளை பதிவு செய்திருப்பார்கள் போல உள்ளது. அப்படி நெகட்டிவாக சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிடும் நபர்களை பார்த்து வரலட்சுமி படு காண்டாக பேசியிருக்கிறார்.

அதில் உங்களுடைய அம்மாவையோ, தங்கையோ அல்லது குடும்பத்தில் இருக்கும் பெண்களை எங்களை பேசுற மாதிரி தவறாக பேசுவார்களா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

மோசமான கமெண்ட்..

மோசமான கமெண்ட்களை போடக்கூடியவர்கள் உங்களுக்கு அந்த நபரை பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து அன்ஃபாலோ செய்து விடுங்கள். அதை விட்டு விட்டு நீங்கள் ஃபாலோ செய்து உங்களுடைய கமெண்டை போட்டு மற்றவர்களின் மனதை நோகடிக்க வேண்டாம்.

நீங்கள் தானே ஃபாலோ செய்து ஒவ்வொரு பதிவையும் பார்க்கிறீர்கள். அப்படி பார்க்கும் போது உங்கள் பதிவு பிடித்திருந்தால் லைக் ஐ போடுங்கள். இல்லை என்றால் நிறை குறைகளை கூறுங்கள். அதை விட்டு விட்டு முகம் தெரியாத நபருக்கு கண்டபடி கமாண்ட் அடிப்பது முறையானது அல்ல.

பிடிக்கலைன்னா அன்ஃபாலோ பண்ணு கொய்யால..

அப்படி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அன்ஃபாலோ பண்ணுங்க இல்லையென்றால் நேரடியாக வந்து நேருக்கு நேர் தெம்பிருந்தால் கமெண்ட் அடியுங்கள். இதை விட்டுவிட்டு நேருக்கு நேர் அது மாதிரியான செயல்களைச் செய்ய தைரியம் இல்லாமல் இப்படி நடந்து கொள்ளும் நீங்கள் ஒரு கோழை.

அன் ஃபாலோ செய்யாமல் தொடர்ந்து ஃபாலோ செய்து கொண்டு இது போன்ற ஈனச் செயல்களை செய்யக்கூடிய கோழைகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தன்னுடைய போஸ்டர்களுக்கு அசிங்கமான கமாண்டுகளை கொடுத்த நபர்களுக்கு சரியான பதிலடியை வரலட்சுமி கொடுத்திருக்கிறார்.

வரலட்சுமி இந்த செயலை பலரும் பாராட்டு இருப்பதோடு கைபேசியினால் ஏற்படும் பிரச்சனைகளை சரியான முறையில் தீர்க்க வேண்டும். இல்லை என்றால் பலரது பர்சனல் வாழ்க்கையை அது அழித்துவிடக் கூடிய அளவு குற்றங்களை அதிகரிக்கும் என்பதை உணர்த்தி இருப்பதாக கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: காதல் கணவன் பிரிவு.. ரோஜா பிரியங்கா நல்காரி வெளியிட்ட வீடியோ.. ரசிகர்கள் ஷாக்…

இதனை அடுத்து ஒவ்வொருவருடைய பொன்னான நேரத்தை வீணாக்கக்கூடிய அலைபேசியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு சரியான பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் வரலட்சுமி கருத்துகளை தெரிவித்திருக்கிறார் என பலரும் அவருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்கள்.

இந்நிலையில் வரலட்சுமி இந்த செயலைப் பார்த்து மோசமான கமெண்டுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி சரத்குமாரின் பேச்சு இணையங்களில் வைரலாக மாறிவிட்டது.

Exit mobile version