வரலட்சுமி உனக்கு பிடிச்ச கணவரை நீயே.. மகள் குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்ட பதிவை பாருங்க..!

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். குறிப்பாக அவர் நடித்த சேரன் பாண்டியன், நாட்டாமை, சூரியவம்சம், சிம்மராசி, நட்புக்காக, சமுத்திரம் போன்ற பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றன. இப்போதும் குணச்சித்திர வேடங்களில் சரத்குமார் நடித்து வருகிறார்.

நடிகர் சரத்குமாருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி சாயாதேவி. இவரது மகள்தான் வரலட்சுமி சரத்குமார். 2வது மனைவி ராதிகா. முதல் மனைவி சாயாதேவியை பிரிந்த பிறகுதான், ராதிகாவை சரத்குமார் திருமணம் செய்தார். ஆனால் இப்போது சாயாதேவி, ராதிகா எல்லோருமே ஒன்றாக தான் இருக்கின்றனர்.

வரலட்சுமி சரத்குமார்

இந்நிலையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். போடா போடி படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சண்டக்கோழி 2, கன்னிராசி, சர்கார், தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகிறார்.

வரலட்சுமி சரத்குமாருக்கு 38 வயதான நிலையில், கடந்த 1ம் தேதி அவருக்கு திருமணம் செய்ய மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்தது. வரலட்சுமிக்கும், மும்பையை சேர்ந்த நிக்கோலை சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அவர் ஆர்ட் காலரி வைத்திருக்கும் மிகப்பெரிய தொழிலதிபர்.

இதையும் படியுங்கள்: இரண்டாம் மனைவியான நடிகை அமலா.. பலரும் அறியாத ரகசியம்..!

2வது மனைவியாக…

அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவியை பிரிந்து விட்டார். 15 வயதில் அவருக்கு மகள் இருக்கிறார். அவருக்கு 2வது மனைவியாக தான் வரலட்சுமி, திருமணம் செய்ய இருக்கிறார்.

பிறந்த நாள் வாழ்த்துகள்

சரத்குமார் மகள் வரலட்சுமி தற்போது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். இந்நிலையில், தனது மகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து நடிகர் சரத்குமார் சில விஷயங்களை பதிவிட்டுள்ளார். அதில் சரத்குமார் கூறியிருப்பதாவது,

எனது அன்பு மகளே, இது உன்னோட வழக்கமான பிறந்த நாளை விட இந்த பிறந்த நாள் ரொம்பவும் ஸ்பெஷலானது. இனி எப்போதும் உன் வாழ்க்கையில் சந்தோஷமும், நிம்மதியும் நெறைஞ்சு இருக்கும்.

இதையும் படியுங்கள்: கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் சாமியார் ஆன முன்னணி நடிகை.. யாரு காரணம் தெரியுமா..?

நீயே தேடிக்கிட்டே…

உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு வாழ்க்கை துணையை நீயே தேடீட்டே. இந்த துணை உன் வாழ்க்கையில் எப்பவுமே அன்பையும், நெருக்கத்தையும், விருப்பத்தையும் தருவதாக இருக்கட்டும். உங்களோட தெய்வீக பயணத்தில் அது சக்தியாக இருந்து உங்களுக்கு அது வழிகாட்டும்.

பிறந்த நாள் வாழ்த்துகள் வரூ. உன் வாழ்க்கையில் எப்பவும் நீ ஆசிர்வதிக்கப்பட்டவளாகவே இருப்பாய் என்று தனது உணர்ச்சி பூர்வமான ஒரு பதிவை செய்திருக்கிறார் சரத்குமார்.

அதற்கு தேங்க்யூ டாடி என வரலட்சுமியும் பதில் தெரிவித்து இருக்கிறார். இதே பதிவில், நடிகை ராதிகாவும் வரலட்சுமிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியிருக்கிறார்.

வரலட்சுமியின் முடிவுதான்

வரலட்சுமி உனக்கு பிடிச்ச கணவரை நீயே தேடிக்கொண்டாய் என்று மகள் குறித்து நடிகர் சரத்குமார் வெளியிட்ட பதிவை பார்த்தால், இந்த திருமணத்தில் சரத்குமார், ராதிகா, சாயாதேவி ஆகியோரின் விருப்பங்களை கடந்து, வரலட்சுமியின் விருப்பமான சொந்த முடிவுதான் இது என்பது வெளிப்பட்டுள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version