நடிகை வரலட்சுமி-யையே அட்ஜஸ்மெண்டுக்கு கூப்பிட்டாங்களா…? – உண்மையை போட்டு உடைத்த வரலட்சுமி.!!

நடிகை வரலட்சுமி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகம் ஆனார்.

முதல் படத்திலேயே அற்புதமான தனது நடிப்பை திறனை வெளிப்படுத்திய வரலட்சுமிக்கு தமிழ் சினிமா மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது.இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தில் ஒரு எதார்த்தமான நடிப்பில் நடனமாடும் பெண்ணாக அந்த கதாபாத்திரம் அமைந்திருந்தது.

இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. கன்னட சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. கன்னடத்தில் ‘மாணிக்கையா’ என்ற படத்தில் முதல் முறையாக அறிமுகமானார்.

பிறகு தமிழ்,தெலுங்கு ,கன்னடம் மலையாளம் போன்ற அனைத்து படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. 2017 ஆம் ஆண்டு வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி படத்தில் மீண்டும் தமிழில் நடித்தார்.

இந்த படத்திலும் இவருடைய நடிப்பில் அனைத்து மக்களையும் வெகுவாக கவர்ந்தார். இதை அடுத்து சத்யா ,சந்திர மௌலி ,எச்சரிக்கை ,சண்டக்கோழி 2, மற்றும் விஜய் நடித்த ‘சர்க்கார்’ படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதை எடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது. இவர் சமீபத்தில் ஒரு ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பேட்டி ஒன்றில் என்னையும் ‘அட்ஜஸ்மெண்டுக்கு’ அழைத்திருக்கிறார்கள் என்று பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை அனைத்து பத்திரிகையாளர்கள் முன்பும் வைத்தார்.

அவர் ஒரு டிவி சேனல் நிறுவனர்.அதில் அவர் கூறியதாவது, ஒரு டிவி சேனல் நிறுவனர் நிகழ்ச்சி குறித்து என்னிடம் பேச வந்தார்கள். பேசி முடித்துவிட்டு மற்ற விஷயங்களை எல்லாம் ஹோட்டலில் பேசலாமா என்று என்னிடம் கேட்டார்.

இந்த கேள்வியை அவரிடம் இருந்து வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பிரபல முன்னணி நடிகரான சரத்குமாரின் மகளான என்னிடமே இப்படி கேட்கிறார்கள் என்றால் சாதாரண இடத்திலிருந்து வரும் பெண்களுக்கு எவ்வளவு தொல்லை கொடுத்திருப்பார் என்று நான் நினைத்தேன். அதன்பின்பு நீங்கள் உடனே கிளம்புங்கள் இல்லை என்றால் வேறு மாதிரி ஆகிவிடும் என்று கூறினேன். அவர் உடனே அந்த இடத்தில் இருந்து சென்று விட்டார்.

இவ்வாறு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு தொடர்பான விஷயங்களை அனைவரிடமும் பகிருந்தார்.மேலும் இதுபோன்ற சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …