கல்யாணம் பண்ண யாரு நல்லா இருப்பாங்க.. வரலட்சுமி வெளியிட்ட திடீர் வீடியோ..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இப்போது இருக்கும் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் பிரபல நடிகர்களின் வாரிசாக தான் இருக்கின்றனர்.
அந்த வகையில் கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு, வனிதா விஜயகுமார், தன்யா ரவிச்சந்திரன், கார்த்தி, சூர்யா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சண்முக பாண்டியன், சிபிராஜ், ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் போன்ற பலரை குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

வரலட்சுமி சரத்குமார்

அந்த வரிசையில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். துவக்கத்தில் தமிழில் பல படங்களில் நடித்த வரலட்சுமி, இப்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தொழிலதிபர்

சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நிச்சயதார்த்தம் முடிந்த பின், இருவரும் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று டேட்டிங் செய்தனர். அவர்கள் மிக நெருக்கமாக இருந்த புகைப்படங்களும், அந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

போடா போடி படத்தில் அறிமுகம்

கடந்த 2012 ஆம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி. அதன் பிறகு தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, கன்னி ராசி, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்த வரலட்சுமி, தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அவரது நடிப்பு பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் அவர் நடித்த ஹனுமன் படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

விஷாலுடன் காதல்

துவக்கத்தில் விஷால் – வரலட்சுமி சரத்குமார் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரேக்கப் செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கரம் பிடிக்க நிச்சயதார்த்தம் செய்துள்ளார் வரலட்சுமி. நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் வரும் டிசம்பர் இறுதிக்குள் இவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு நல்லது?

இந்நிலையில் வீடியோ ஒன்றை தெலுங்கில் வெளியிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார். அதில் திருமணம் நடந்தால் யாருக்கு நல்லது என்ற கேள்வியுடன் தொடங்கும் இந்த வீடியோவில், திருமணம் நடந்தால் புகைப்பட கலைஞர்கள், வீடியோகிராபர், சமையல்காரர், மண்டப உரிமையாளர், மேக்கப் ஆர்டிஸ்ட், சேலை கட்டி விடுபவர்கள் போன்றவர்களுக்கு தான் நல்லது. அதனால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கலாய்த்து தெலுங்கில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கலாய்த்த வீடியோ

கல்யாணம் பண்ண யாரு நல்லா இருப்பாங்க என்றால், அதாவது ஒரு திருமணம் நடப்பதன் மூலமாக மேலே குறிப்பிட்டுள்ளவர்களுக்கு எல்லாம் கணிசமான வருமானமும் அதன் மூலம் லாபமும் அவர்கள் அடைவதால், அவர்களின் நல்லதுக்காக திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என கலாய்த்து இந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version