மலமாடு மாதிரி இருக்கான்.. வருங்கால கணவர் குறித்து ட்ரோல் செய்த நெட்டிசன்.. வரலட்சுமி கொடுத்த பதிலடி..!

என்னதான் சினிமா நடிகையாக இருந்தாலும், அவரை விமர்சித்து பேச ரசிகர்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. குறிப்பாக அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சித்தும், கொச்சைப்படுத்துவதும் ஒரு தவறான அணுகுமுறையாக மாறிவிடுகிறது. சில ரசிகர்கள் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஏனெனில் ஒருவரின் அந்தரங்கத்தை பற்றி பேசுவது, அதுவும் அவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்வது, தவிர்க்க வேண்டிய ஒரு செயலாக தான் பார்க்கப்படுகிறது. அது அவர்களை காயப்படுத்தும் விதமாக இருந்துவிடக் கூடாது.

வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவை வைத்து சிலர் ட்ரோல் செய்து வந்த நிலையில், இதற்கு வரலட்சுமி சரத்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் சரத்குமாரின் மகள்தான் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சரத்குமார், கம்பீரமான ஒரு நடிகராக பார்க்கப்படுபவர்.

சரத்குமார், தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே மும்பையில் இருந்த போது சாயாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்த மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

காதல், பாய்ஸ் படங்களில்…

வரலட்சுமி, கல்லூரியில் படிக்கும்போதே காதல் மற்றும் பாய்ஸ் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், நடிகர் சரத்குமார் அந்த படங்களில் நடிக்க வேண்டாம் என்றும் மறுத்துவிட்டார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கியவர் டைரக்டர் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை எனினும், ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனம் பெற்ற படமாக அமைந்தது.

தொடர்ந்து ஹீரோயினாக, வில்லியாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், தமிழில் மட்டுமின்றி இப்போது தெலுங்கு படங்களில் அதிக படங்களின் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது.

விஷாலுடன் காதல்

வரலட்சுமியும், நடிகர் விஷாலும் சில ஆண்டுகள் காதலித்து நிலையில் அவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தனது 14 வருட கால நண்பரான நிக்கோலாய் சச்தேவ் என்ற மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை, 2வது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் வரலட்சுமி.

மும்பையில் நிச்சயதார்த்தம்

கடந்த மார்ச் 1ம் தேதி இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம், மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இதில் சரத்குமார், ராதிகா, சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி உள்ளிட்ட நெருக்கமான குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

நிக்கோலாய் சச்தேவ்

நிக்கோலாய் சச்தேவ் ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார் என்ற தகவல், நிச்சயதார்த்தத்திற்கு பின்புதான் வெளியானது. 15 வயது மகளுக்கு மாற்றாந்தாயாக, 2வது மனைவியாக வரலட்சுமிக்கு இந்த திருமணம் அவசியம்தானா என, பலரும் விமர்சித்தனர்.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத வரலட்சுமி, திருமண நிச்சயதார்த்தத்துக்கு பின்னர், தனது வருங்கால கணவருடன் சமீபத்தில் தாய்லாந்து நாட்டுக்கு சென்று அங்கு டேட்டிங் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

சமூக வலைதளங்களில் வரலட்சுமி வெளியிடும் இந்த புகைப்படங்களை பார்க்கும் சில நெட்டிசன்கள் நிகோலாய் தோற்றம் குறித்து ட்ரோல் செய்து வந்தனர்.
மிகவும் அழகானவர்

குறிப்பாக அவரது பெரிய உருவத் தோற்றத்தை வைத்து, கலாய்த்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, வரலட்சுமி தன்னுடைய காதலர் வருங்கால கணவர் நிக்கோலாய் குறித்து குறிப்பிட்டு, என் பார்வைக்கு மிகவும் அழகானவர் என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.

மலமாடு மாதிரி இருக்கான்

மலமாடு மாதிரி இருக்கான் என்று கிண்டல் செய்தவர்களுகககு, தனது வருங்கால கணவர் மிக அழகானவர் என்று வரலட்சுமி பதிலடி கொடுத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version