ஓஹோ.. கல்யாணத்துக்கு முன்னாடியேவா..? வெளிநாட்டில் வரலட்சுமி.. வைரலாகும் போட்டோஸ்..

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி. இவருக்கு 2 மகள்கள். அவர்களில் ஒருவர்தான் வரலட்சுமி சரத்குமார். இன்னொரு மகள் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது.

வரலட்சுமி சரத்குமார்

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி படத்தில் வரலட்சுமி சரத்குமார் அறிமுகமானார். இந்த படத்தில் சிலம்பரசன் ஜோடியாக நடித்திருந்தார்.
முதல் மனைவி சாயாதேவியை விவாகரத்து செய்த சரத்குமார், 2வது மனைவியாக ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டார். ஏற்கனவே ராதிகாவுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், சரத்குமாருக்கு ரோஹித் என்ற மகன் பிறந்தார்.

துவக்கத்தில் சரத்குமாரும், சாயாதேவியும் பிரிந்திருந்த நிலையில், பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான நிலையில் சாயாதேவி சரத்குமார் உறவின் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அம்மா சாயாதேவி

மேலும் சரத்குமார் முன்னாள் மனைவி சாயாதேவி, இப்போது டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்திருக்கிறார்.அந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறேன். ஆனால் அதுபற்றி எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது என மறுத்திருக்கிறார் சாயாதேவி. ஆக, கணவர் சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமியை தொடர்ந்து அம்மா சாயா தேவியும் நடிக்க வந்துவிட்டார்.

இதையும் படியுங்கள்: கோலி சோடா ATM நடிகை சீதாவா இது..? பளபளன்னு ஹீரோயினி மாதிரி மாறிட்டாங்களே.. வாயடைத்து போன ரசிகர்கள்..

தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்

சாயாதேவி, மீண்டும் இப்போது சரத்குமார் குடும்பத்துடன் இணக்கமாக இருப்பதால், அனைவரும் சேர்ந்து கடந்த மார்ச் 1ம் தேதி, மும்பையில் தொழிலதிபர் நிக்கோலை சச் தேவ்க்கும், வரலட்சுமிக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர்.

இரண்டாவது மனைவி

வரலட்சுமிக்கு 38 வயதான நிலையில், நிக்கோலைக்கு 2வது மனைவியாகிறார். அவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தவர். அவருக்கு 15 வயதில் மகள் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது என் வாழ்க்கை, என்னை விமர்சிப்பவர் யாரும் என்னுடன் கடைசி வரை பயணிக்க போவது இல்லை. அதனால் இதுபற்றி யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என பதிலடி தந்திருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

இதையும் படியுங்கள்: டைவர்ஸ், ப்ரேக் அப் ஆனாலும் தன்னுடைய Exஐ விட்டுக்கொடுக்காத நான்கு நடிகர்கள்..!

தாய்லாந்து டூர்

இந்நிலையில் வரலட்சுமியும், நிக்கோலையும் தாய்லாந்து நாட்டுக்கு டூர் சென்றுள்ளனர். அதாவது ஸம்மர் லொக்கேஷனை தனது வருங்கால கணவருடன் கழிக்க, அங்கு இவரும் ஒரு ஜாலியான டூர் அடித்துள்ளனர்.

இருவரும் கட்டிப்பிடித்தபடி, நெருக்கமாக நின்றபடி பல இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

கல்யாணத்துக்கு முன்னாடியேவா..?

அங்கு வரலட்சுமியும், நிக்கோலையும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கல்யாணத்துக்கு முன்னாடியே கணவருடன் இன்ப சுற்றுலா கிளம்பிவிட்டார் வரலட்சுமி..

இதனை புகைப்படங்கள் வாயிலாக அறிந்த ரசிகர்கள் ஓஹோ.. கல்யாணத்துக்கு முன்னாடியேவா..? என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version