சாவு வீட்ல போய் இதை கேட்டா எப்படி இருக்கும்..? திருமணம் குறித்து வரலட்சுமி சரத்குமார்..!

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். சரத்குமார் தமிழ் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் மும்பையில் இருந்தார். அப்போது சாயா தேவி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு 2 மகள்கள். அதில் ஒருவர்தான் வரலட்சுமி சரத்குமார்.

வரலட்சுமி சரத்குமார்

முதல் மனைவி சாயா தேவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்துவிட்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு, நடிகை ராதிகாவை 2வது திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பித்து ரோகித் என்ற மகன் இருக்கிறார்.

சரத்குமார், தனது முதல் மனைவிை பிரிந்தாலும் சரத்குமாரின் மகள்கள் அப்பாவிடம் நெருக்கமாக இருந்தார்கள். குறிப்பாக வரலட்சுமி அப்பாவை போலவே நடிக்க வந்துவிட்டார்.

போடா போடி

டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு சண்டக்கோழி 2, கன்னிராசி 2, மாரி 2, சர்கார், தாரை தப்பட்டை, நீயா 2, மதகஜராஜா 2, மைக்கேல், நிபுணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் இப்போது தெலுங்கில் மிக பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.

இதையும் படியுங்கள்: லொள்ளு சபா நடிகர் சேஷூ மறைந்தார்.. வெண்டிலெட்டரை அடுத்த நொடி நடந்த கொடூரம்..!

மும்பை தொழிலதிபர்

இந்நிலையில், கடந்த மார்ச் 1ம் தேதி, வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த மாப்பிள்ளை ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர்.

15 வயது மகளுக்கு அப்பா என்ற நிலையில், வரலட்சுமி அவருக்கு 2ம் தாரமாக ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனது வரலட்சுமிக்கு இப்போது வயது 38 ஆகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

எப்போது திருமணம்

நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் பொழுது எப்பொழுது பார்த்தாலும் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள்.

திருமணம் செய்து கொண்டால் குழந்தை எப்போது எனக்கு கேட்கிறார்கள். குழந்தை பெற்றுக் கொண்டால், எப்போது பள்ளியில் சேர்ப்பீர்கள் என்று கேட்கிறார்கள். இப்படி ஏதேனும் ஒன்றை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

திருமண வீடுகளுக்கு செல்வதை நான் வெறுக்கிறேன், காரணம் திருமணத்திற்கு செல்லும் போதெல்லாம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்கிறார்கள்.

எப்போது சாகப் போகிறீர்கள்

நான் தெரியாமல் கேட்கிறேன். சாவு வீட்டில் போய் நீங்கள் எப்போது சாகப் போகிறீர்கள் என்று யாரையாவது நாம் கேட்போமா..? பிறகு ஏன் திருமண வீட்டில் மட்டும் இந்த கொடுமை நடக்கிறது..? என்று ஆதங்கத்தை கொட்டி கலகலவென பேசியிருக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்

இதையும் படியுங்கள்: என் அம்மா தான் காரணம்.. நான் எதிர்பாக்கவே இல்ல.. நடிகை மீனா குமுறல்..!

எப்போது திருமணம் திருமணம் என்று கேட்டு டார்ச்சர் செய்பவர்கள், சாவு வீட்ல போய், எப்போது சாகப் போகிறீர்கள் எனக் கேட்டா எப்படி இருக்கும் என்று ஏகப்பட்ட கடுப்பில் திருமணம் குறித்து பேசியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். இது தற்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version