என்னது..? நான் 2வது பொண்டாட்டியா.. வரலட்சுமி சரத்குமார் கொடுத்த பதிலை பாத்தீங்களா..?

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். துவக்கத்தில் தயாரிப்பாளராக சில படங்களை தயாரித்த சரத்குமாரை, புலன் விசாரணை படம் மூலம் நடிகராக மாற்றியவர் நடிகர் விஜயகாந்த்.

புலன்விசாரணை படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த சரத்குமார், அடுத்த படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் நண்பராக, வனத்துறை அதிகாரியாக நடித்திருப்பார்.

சரத்குமார்

அடுத்த சில படங்களில் வில்லனாக நடித்த சரத்குமார் சேரன் பாண்டியன், நாட்டாமை, சூரிய வம்சம் போன்ற படங்களில் நடித்து பெரிய நடிகராக மாறினார்.

சரத்குமாரின் முதல் மனைவி பெயர் சாயாதேவி. இவரது மகள்தான் வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்த தாரை தப்பட்டை, சண்டக்கோழி 2, கன்னிராசி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தெலுங்கு படங்களில்

இப்போது தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். தமிழில் போதிய வாய்ப்பற்ற நிலையில் தெலுங்கில் வரலட்சுமிக்கு சரத்குமாருக்கு வாய்ப்புகள் குவிகிறது.

இதையும் படியுங்கள்: ஸ்ரீ பாப்பா கைக்குள்ள அப்பா.. அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட பிக்பாஸ் வனிதா..

இந்நிலையில், கடந்த 1ம் தேதி மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கும், வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் அவர் ஏற்கனவே திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்தவர். 15 வயதில் அவருக்கு மகள் இருக்கிறார் போன்ற தகவல்கள் வைரலானது.

2வது திருமணம்

ஏற்கனவே திருமணமான 43 வயதானவரை வரலட்சுமி 2வது திருமணம் செய்வது ஏன் என்றும் பலரிடையே கேள்வி எழுந்தது.

இந்நிலையில், வரலட்சுமி சரத்குமார் அதற்கு பதிலளிக்கும் விதமான ஒரு பதிவை தனது வலைதள பக்கத்தில் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அப்பா கடைசியா சொன்ன வார்த்தை.. நெஞ்சை உருக்கும் தகவலை வெளியிட்ட விஜயகாந்த் மகன்..!

மத்தவங்க என்னை பத்தி என்ன பேசறாங்க அப்படீன்னு நான் எப்பவுமே கவலைப்பட மாட்டேன்.

இப்படிதான் பெண்கள் எப்பவுமே மத்தவங்களை பத்தி கவலைப்படாம தைரியமாக இருக்கணும் என்று, வரலட்சுமி சரத்குமார் மகளிர் தினத்தன்று ஒரு போஸ்ட் வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கை முழுவதும்

மேலும் அதில், நீங்கள் உங்களுக்காக வாழுங்க. நீ இதை பண்ணாத, அதை பண்ணாத ன்னு சொல்றவங்க யாருமே, உங்க கூட வாழ்க்கை முழுவதும் டிராவல் பண்ண மாட்டாங்க. நீங்க மட்டும்தான் உங்க வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு துணையா நிற்கப் போறீங்க.

அதனால் உங்களுக்கு என்ன தோணுதோ, அதை நீங்க பண்ணுங்க என்றும் அந்த பதிவில் இன்னும் சொல்லி இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

கவலை இல்லை

இது என்னோட வாழ்க்கை, நான் 2வது பொண்டாட்டி என்பதெல்லாம் என்னோட தனி்ப்பட்ட விஷயம். யார் எது சொன்னாலும் கவலை இல்லை என்கிற விதமாக வரலட்சுமி சரத்குமார், இந்த பதிவின் மூலம் தனது பதிலை தந்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version