கல்யாணத்துக்கு முன்னாடியேவா..? வரலட்சுமி வெளியிட்ட தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசையாக இருந்தார்.

ஆனால் அதற்கு சரத்குமார் அனுமதிக்கவில்லை. வெகு நாட்களாக வரலட்சுமி சரத்குமார் கதாநாயகி ஆவதற்கு மறுப்பு தெரிவித்தே வந்துள்ளார். ஆனால் தனது மகள் பிடிவாதமாக கதாநாயகியாக வேண்டும் என்ற ஆசையில் இருந்த காரணத்தினால் அவர் நடிப்பதற்கு சரத்குமார் ஒப்புக்கொண்டார்.

அப்படியாக வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் முதன் முதலாக வெளியான திரைப்படம் போடா போடி. இந்த திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்திருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

தமிழில் வரவேற்பு:

இந்த திரைப்படம் அப்பொழுது பெரிதாக வரவேற்பை பெறவில்லை ஆனால் வெளியாகி சில காலங்களுக்கு பிறகு வெகுவாக பேசப்பட்ட படமாக போடா போடி திரைப்படம் இருந்தது.

மேலும் வரலட்சுமி சரத்குமாருக்கும் அது கொஞ்சம் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வாய்ப்பை பெற்றார் வரலட்சுமி சரத்குமார். அவர் நடித்த திரைப்படங்களில் தாரை தப்பட்ட திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படம் என கூறலாம்.

இந்த திரைப்படத்தில் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். மேலும் அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையில் அந்த கதாபாத்திரமும் இருந்தது.

வில்லியாக எண்ட்ரி:

அதனை தொடர்ந்து அந்த திரைப்படத்திற்காக அவர் விருதுகளும் கூட வாங்கினார். தற்சமயம் நிறைய திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

சர்க்கார், சண்டக்கோழி 2, யசோதா மாதிரியான திரைப்படங்களில் வில்லியாக நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்று வரும் இவர் சமீபத்தில் தனக்கு நிச்சயதார்த்தமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தில் இருந்த தொழிலதிபர் வருண் என்பவர் யார் என்று பலருக்கும் சந்தேகம் இருந்து வந்த நிலையில் ஒரு பேட்டியில் அதை பூர்த்தி செய்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

அதாவது வருணுக்கும் இவருக்கும் 14 வருடங்களாகவே பழக்கம் உள்ளது அதன் பிறகு அவரை காதலித்து வந்த வருண் அவருடைய குடும்பத்தை அழைத்து வந்துதான் வரலட்சுமியிடம் லவ் ப்ரொபோஸ் செய்தார் என்கிறார் வரலட்சுமி.

மேலும் அவர் மும்பையில் இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வீட்டை ஏற்கனவே கட்டி வைத்திருக்கிறார். திருமணத்திற்கு முன்பே எங்களுக்கான வீடு வரை தயாராகி விட்டது என்று அது குறித்து கூறியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version