வரலட்சுமி ஹனிமூன் போட்டோஸ்… ரெட்டை வாழைப்பழம் போல ஒட்டிக்கொண்டு ரொமான்ஸ்..!

தமிழில் வாரிசு நடிகையாக அறிமுகமான ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் அவரது புகழை பயன்படுத்தி சினிமாவிற்குள் வாய்ப்பு தேடி வந்தார்.

ஆரம்பத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. விக்னேஷ் சிவன் முதன்முதலாக இயக்கிய போடா போடி திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார்.

முதல் திரைப்படத்திலேயே கொஞ்சம் கவர்ச்சியான ஒரு கதாபாத்திரமாகதான் அவர் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் அப்பொழுது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த திரைப்படத்திற்கான வரவேற்பு என்பது கொஞ்சம் அதிகமாக இருந்தது.

வரலெட்சுமி காதல்:

ஆனால் பார்ப்பதற்கு வரலட்சுமி சரத்குமார் கொஞ்சம் ஆண் சாயலிலும் அவர் குரலும் கொஞ்சம் ஆண் போல இருப்பதால் வரவேற்பு என்பது அவருக்கு குறைந்த வண்ணமே இருந்தது. இருந்தாலும் அதையே ஒரு நேர்மாறையான விஷயமாக பயன்படுத்திக் கொண்டார் வரலட்சுமி சரத்குமார்.

தொடர்ந்து விக்ரம் வேதா, சத்யா என்று நிறைய திரைப்படங்களில் நடித்தார் சண்டக்கோழி 2, சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் வில்லியாக நடிக்க துவங்கினார் வரலட்சுமி சரத்குமார். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் அவருக்கு வில்லியாகவும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

இருந்தாலும் அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி. இந்த வருடம் மட்டுமே அவரது நடிப்பில் அனுமான், சபரி என்று இரண்டு தெலுங்கு படங்கள் வெளியாகி இருக்கின்றன.

திருமண ஏற்பாடு:

தொடர்ந்து தமிழிலும் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார் இதற்கு நடுவே அவர்களுக்கு காதல் திருமணம் தொடர்பான விஷயங்கள் பரவலாக ட்ரண்டாகி இருந்தன. வரலட்சுமி சரத்குமார் நிக்கலாய் சர்ச் தேவ் என்னும் நபரை காதலித்து வந்தார்.

இவர் பெரும் தொழிலதிபரான நிக்கலோய் சச்தேவை வரலட்சுமி சரத்குமார் வெகு நாட்களாகவே காதல் வந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து பிறகு திருமணமும் நடந்தது.

அதனை தொடர்ந்து ஒரு சில பேட்டிகளிலும் தன்னுடைய திருமணம் குறித்தும் தன்னுடைய காதலர் குறித்தும் வரலட்சுமி சரத்குமார் பகிர்ந்திருந்தார். இவரது திருமணம் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மிகவும் பெரிய அளவில் நடத்தப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திருமணம் ஆகி 5 நாட்கள் ஆன நிலையில் தற்சமயம் வரலட்சுமி தனது கணவருடன் ஹனிமூன் சென்று இருக்கிறார்.

அங்கு புயலுக்கு பின் அமைதி என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட புகைப்படங்கள்தான் அதிக வைரலாகி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version