வரலக்ஷ்மி சரத்குமார் திருமணம்.. வரதட்சணை மட்டும் இத்தனை கோடியா.. கிருட்டு கிருட்டுன்னு வருதே…

தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சிம்பு நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் என புகழ் பெற்றிருக்கும் சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவிக்கு பிறந்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் தனது போல்டான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

இந்நிலையில் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமிக்கு மும்பையை சேர்ந்த நிக்கோலஸ் என்ற தொழிலதிபருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததுள்ளது. வரலட்சுமி தன் குடும்பத்தினர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பகிர அது வைரலாகிவிட்டது.

இதுகுறித்து வரலட்சுமி சரத்குமார் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், “வரலஷ்மி சரத்குமார் அவர்களும், மும்பை தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் அவர்களும் திருமணம் செய்ய முடிவெடுத்து 01.03.2024 , மும்பையில், பெற்றோர்கள் முன்னிலையிலும், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையிலும், நண்பர்கள் முன்னிலையிலும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்து கொண்டனர் என கூறியுள்ளனர்.

அத்துடன் இந்த நிச்சயதார்த்த புகைப்படங்களைப் நடிகை ராதிகா பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில், சரத்குமார் தன்னுடைய இந்நாள் மனைவி ராதிகா உடனும் முன்னாள் மனைவி சாயா அவருடன் ராதிகாவின் மகள் ரேயன் ( ராதிகாவின் முன்னாள் வெள்ளைக்கார கணவருக்கு பிறந்தவர்) அனைவரும் ஒரே பிரேமில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதையும் படியுங்கள்;என்னது.. இந்த ஐட்டம் பாட்டை பாடினது ஸ்ரீவித்யாவா..? கிறுகிறுன்னு வருதே..

இப்படியான புகைப்படங்கள் எப்போது சாத்தியமாகும் என்றால்..? ஒருவரின் அந்தரங்கத்தை மதிக்கும் போது ஒருவரின் அந்தரங்கத்துக்கு மதிப்பு கொடுக்கும் போது இவைகள் சாத்தியம் என சமூகவலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் இவருடைய திருமணத்திற்காக கார் பணம் நகை என கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் வரதட்சணையாக மட்டும் கொடுக்கப்பட இருக்கிறது என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்து வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் என்னது 250 கோடி வரதட்சனையா..? என்று புலம்பி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version