கடும் கோபம்.. சரத்குமாரை பழிவாங்க துடித்த வரலட்சுமி..! இவரு என்ன இப்படி சொல்றாப்டி…!

சில வருடங்களாக இருந்து வந்த காதலுக்கு பிறகு தொழிலதிபர் நிக்கலோய் சச் தேவும் வரலட்சுமி சரத்குமாரும் கடந்த இரண்டாம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது. தாய்லாந்தில் உள்ள பாலிதீவில் கோடிகளில் செலவு செய்து இந்த திருமணம் நடத்தப்பட்டது. இதற்காக சொந்தக்காரர்கள் மட்டும் நிறைய முறை விமானத்தில் வந்து இறங்கினர்.

அதற்கான செலவுகளை கூட மாப்பிள்ளை வீட்டார்தான் பார்த்துக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திருமணம் இவ்வளவு செல்வாக்காக நடப்பதற்கு முக்கிய காரணம் வரலட்சுமி சரத்குமாரின் காதலரான நிக்கோலாய்தான்.

வரலெட்சுமி காதல்:

மும்பையில் நிக்கலோய் பிரபலமான ஒரு தொழிலதிபராவார். 500 கோடிக்கும் அதிகமான சொத்துக்கு அதிபதியாக அவர் இருந்து வருகிறார் சரத்குமாருடன் ஒப்பிடும்பொழுது மூன்று நான்கு மடங்கு அதிக சொத்துக்களை கொண்டவர் நிக்கலோய்.

அவர் மும்பையில் ஒரு ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து உள்ளார். அந்த ஆட் கேலரியில் இருக்கும் ஒரு சில ஓவியங்களே பல கோடி ரூபாய்க்கு விற்பனையாக கூடியவை என்று கூறுகிறார் பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு.

நிக்கலோய் சச்தேவ் இதற்கு முன்பே ஒரு திருமணம் செய்து கொண்டார் ஆனால் அந்த பெண்ணுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அந்த பெண்ணின் மூலமாக பிறந்த ஒரு மகளும் இருக்கிறார். அவருக்கு 16 வயது ஆகிறது என்று கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம்:

இப்படி இருந்தும் கூட வரலட்சுமி அவரது காதலை ஏற்றுக் கொண்டார் அவரது குடும்பத்தினரும் இதற்கு ஒப்புக்கொண்டனர். அதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தமும் நடந்தது.

இவர்களது திருமணத்தை தாய்லாந்தில் முடித்துவிட்டு திருமணத்திற்கு வராதவர்களுக்காக வரவேற்பை சென்னையில் நடத்தினர். அதில்  திரை துறையை சார்ந்த நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர் இது குறித்து செய்யாறு பாலு சில சர்ச்சைக்குரிய தகவல்களையும் கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது தன்னுடைய அம்மா சாயா தேவியை சரத்குமார் தனியாக தவிக்க விட்டு சென்றார் என்பதில் வரலட்சுமிக்கு அவர் மீது கோபம் உள்ளது. மேலும் வரலட்சுமிக்கு பூஜா என்ற தங்கையும் இருக்கிறார்.

சரத்குமாரை பழிவாங்கிய வரலெட்சுமி:

எனவே தமிழ் சினிமாவில் களமிறங்கி சரத்குமாரை பழிவாங்க வேண்டும் என்பதுதான் ஆரம்பத்தில் வரலட்சுமியின் எண்ணமாக இருந்தது. அதனால்தான் அவர் சினிமாவிற்கு வந்தார். முதலில் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக நடிக்க இருந்தார் வரலட்சுமி சரத்குமார்.

ஆனால் இந்த விஷயம் சரத்குமாருக்கு தெரிந்து போக அவர் அந்த வாய்ப்பை நிறுத்தி வைத்து விட்டார். ஷங்கரும் அதனால் அந்த படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் வரலட்சுமிக்கு மிகுந்த கோபம் வந்தது அதனை தொடர்ந்து போடா போடி என்கிற படத்தில் அவரே வாய்ப்பைப் பெற்று நடித்தார் வரலட்சுமி சரத்குமார் என்கிறார் செய்யாறு பாலு.

ஒருவேளை போடா போடி திரைப்படத்தில் வரலட்சுமி அதிக கவர்ச்சியாக நடித்ததற்கு சரத்குமாரை பழி வாங்க வேண்டும் என்கிற எண்ணம் கூட காரணமாக இருந்திருக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version