வரலட்சுமிக்கு நான் முதல் காதலன் இல்ல.. மேடையிலேயே குண்டை போட்ட நிக்கோலாய்..!

திரை உலகில் தற்போது நட்சத்திரங்களின் திருமணங்கள் ஒவ்வொன்றாய் நடந்து முடிந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் திரை உலகின் சுப்ரீம் ஸ்டார் ஆன சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமணம் அண்மையில் தாய்லாந்தில் நடந்து முடிந்தது.

வரலட்சுமி மற்றும் நிக்கோலாயின் திருமணம் பிரம்மாண்ட முறையில் நடந்து முடிந்ததை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதோடு சென்னையில் நிகழ்ந்த ரிசப்ஷனிலும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

வரலட்சுமிக்கு நான் முதல் காதலன் அல்ல..

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவியின் மகள் வரலட்சுமி மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்தோடு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அண்மையில் இவர்களது திருமணம் பெரியவர்களின் ஆசியோடும் நண்பர்கள் புடைசூழ தாய்லாந்தில் முடிந்தது.

இந்நிலையில் இவரது திருமணம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதற்கு காரணம் நிக்கோலாய் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் அந்த பெண்ணை விவாகரத்து செய்கிறார். எனினும் அவருக்கு திருமணம் செய்யக் கூடிய வகையில் ஒரு பெண் உள்ளது என்பது தான் அந்த அதிர்ச்சிகரமான செய்தியாகும்.

மேலும் திருமணம் செய்யக் கூடிய வகையில் ஒரு பெண் குழந்தை இருக்கின்ற சமயத்தில் வரலட்சுமி இரண்டாம் தாரமாக எப்படி நிக்கோலாய் சர்ச்தேவ்வை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்பது போன்ற ரீதியில் ரசிகர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.

இதனை அடுத்து இந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் தற்போது இவர்கள் திருமணம் முடிந்து விட்டது. திருமணம் முடிந்த கையோடு பிரஸ் மீட்டில் தற்போது நிக்கோலாய் பேசி மீண்டும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேடையில் குண்டை போட்ட நிக்கோலாய்..

அப்படி என்ன பிரஸ்மீட்டில் வரலட்சுமி என் காதல் கணவர் நிக்கோலாய் பேசி இருக்கிறார் என்பது குறித்து விரிவாகவும் விளக்கமாகவும் இந்த பதிவு நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே ஒரு பெண் திருமணம் நடந்து முடிந்து விட்டால் தனது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரை போடாமல் கணவரது பெயரை போடுவதை தான் வழக்கமாகக் கொண்டு இருப்பார்கள்.

ஆனால் அதற்கு வரலட்சுமி சம்மதிக்காமல் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று போடுவேன் என்று சொல்லி இருக்கக் கூடிய கருத்தை மேடையில் வெளிப்படையாகச் சொன்ன சச்தேவ் வரலட்சுமி அப்படி செய்தாலும் இனிமேல் நான் வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் சரத்குமார் என்று தனது பெயரை மாற்றிக் கொள்ள இருப்பதாக நகைச்சுவையோடு பேசியது அனைவரையும் கவர்ந்தது.

அதுமட்டுமில்லாமல் வரலட்சுமி தான் விரும்பி திருமணம் செய்து கொண்டது தனக்கு கிடைத்த பாக்கியம் என்று சொல்லி இருப்பதோடு மும்பையை விட சென்னை தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று ஆங்கிலத்தில் அழகாக பேசினார்.

மேலும் தமிழ் தனக்கு பேச தெரியாது என்றும் தமிழில் தெரிந்த வார்த்தைகள் வணக்கம் பொண்டாட்டி சாப்பாடு போன்றவை தான் என்று சொன்னவர் வரலட்சுமிக்கு நான் முதல் காதலன் அல்ல அவரது முதல் காதலன் சினிமா தான் என்ற குண்டை தூக்கி போட்டார்.

ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்..

இதனைக் கேட்டு ரசிகர்கள் உறைந்து போனதோடு தன் மனைவியின் முதல் காதலன் சினிமா என்பதை தெரிந்து கொண்ட பின் தான் நான் அவருக்கு இரண்டாவது காரணமாக வரம் வருகிறேன் என்று நிதானத்தோடு மேடையிலேயே பேசி அசத்திய நிக்கோலை அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.

அது மட்டும் அல்லாமல் வரலட்சுமிக்காக உருகி உருகி அவரைப் பெருமையாக பேசியதை நினைத்து பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன்வைத்து வருவதோடு மட்டுமல்லாமல் அவரது கேரியருக்கு பக்கபலமாக இவர் இருப்பார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

நிலையில் பாடத்திற்காகத்தான் வரலட்சுமி நிக்கோலாய் திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்று இணையங்களில் அதிக அளவு பேச்சுக்களும் பதிவுகளும் அதிகரித்த நிலையில் நிக்கோலா இன் இந்த தன்மையை பார்த்து அனைவரும் அசந்து போய் விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version