பலநாள் கேள்விக்கு பதிலளித்த வரலட்சுமி சரத்குமார்..! என்ன இப்படி சொல்லிட்டாங்க..?

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர்.

இவர் சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவிற்கு பிறந்த மகள். இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார்.. பிரபல நடிகரான வரலட்சுமி சரத்குமாரின் தந்தை மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர், அரசியல்வாதி என பன்முக திறமையை கொண்டவர்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்..

தமிழ் திரை உலகை பொருத்த வரை இவர் நடிகர் சிலம்பரசன் இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து சில பட வாய்ப்புகள் இவருக்கு தமிழில் கிடைத்தது.

இதையும் படிங்க: அடுத்த திருமண அறிவிப்பை வெளியிட்ட வனிதா விஜயகுமார்.. இப்போ மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

எனினும் தெலுங்கில் மற்றும் கன்னடத்தில் அதிக அளவு படங்கள் கிடைத்ததால் அதிகளவு தெலுங்கு மற்றும் கன்னட படத்தில் நடித்திருக்க கூடிய இவர் 2016 ஆம் ஆண்டு தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் நடித்து வெகு ஜனங்களை ஈர்த்தார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சல் ஆக்கி விடுவார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு இவர் பதில் தந்திருப்பதை பார்த்து இணையமே அதிர்ந்து விட்டது.

பல நாட்களாக கேட்ட ஒரு கேள்வி..

இந்த கேள்வியை எல்லா நடிகைகளிடம் காலம் காலமாக கேட்டு வருவது இயல்பு தான். அதுவும் திருமணம் ஆகாத நடிகைகளிடம் உங்களது திருமணம் எப்போது என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இது பற்றி தான் வரலட்சுமி சரத்குமார் பேசும் போது எப்போதும் திருமணம்.. அப்படி ஆகி விட்டதால்.. எப்போது குழந்தை என தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.

அத்தோடு இது போல் கேள்வி கேட்பதற்கு முன்பு யாரும் யோசித்துப் பார்ப்பது இல்லை. திருமண வீட்டில் எந்த ஒரு திருமண வயது இருக்கும் பெண்ணை பார்த்தாலும் உடனே பெரியவர்கள் அடுத்து உன்னோட கல்யாணம் எப்போ என்று தான் கேட்பார்கள்.

அட.. இப்படியா பதில் சொல்லுவாங்க..

அது போல எழவு வீட்டுக்கு சென்றால் அடுத்த எழவு எப்போ என்று யாராவது கேட்பார்களா? என்று யாருமே எதிர்பார்க்காத பதிலை தந்ததோடு மட்டுமல்லாமல் அனைவரையும் சிந்திக்க கூடிய வகையில் பேசி விட்டார்.

எந்த பேச்சு தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளதோடு பல நாள் கேள்விக்கு பதில் அளித்த வரலட்சுமியின் பதிலை பாருங்கள் என்று ரசிகர்கள் சொல்லக்கூடிய வகையில் மாறிவிட்டது.

இதையும் படிங்க: ஆஹா.. என்னது.. சமந்தாவின் வீக் எண்ட் ட்ரீட்.. வீக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..

இதனை அடுத்து அண்மையில் தான் நடிகை வரலட்சுமிக்கு மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரி வைத்திருக்கும் நபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் சீரும் சிறப்புமாக நடந்தது.

10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நபரை காதலித்து வந்த வரலட்சுமி இரண்டாம் தாரமாக மாற உள்ள விஷயம் ரசிகர்களின் மத்தியில் செம ஷாக்கை கொடுத்தது.இதுவும் இவர் திருமணம் செய்து கொள்ள போகக்கூடிய நபருக்கு திருமண வயதில் ஒரு பெண் இருக்கிறார்.

அவருக்கு சித்தியாக மாற இருக்க கூடிய விஷயம் அறிந்து ரசிகர்கள் புலம்பி வருவதோடு மண வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version