அப்பா முன்னாடியே என்னிடம் அதை பண்ணாரு.. வருங்கால கணவர் குறித்து கூச்சமின்றி கூறிய வரலட்சுமி..!

தமிழ் திரையுலகில் சுப்ரீம் ஸ்டார் ஆக இருக்கும் நடிகர் சரத்குமாரின் மகளாகிய வரலட்சுமி தனது வருங்கால கணவர் குறித்து மனம் திறந்து பேசி இருக்கும் பேச்சுக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர் தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் இணைந்து போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே நிஷா கேரக்டரை பக்காவாக செய்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

நடிகை வரலட்சுமி..

அந்த வகையில் 2012-ஆம் ஆண்டு மத கஜ ராஜா என்ற திரைப்படத்தில் மாயா கேரக்டரை செய்த இவர் 2016-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான தாரை தப்பட்டை திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் சில படங்களில் ஆன்ட்டி ஹீரோயினியாக நடித்து அசத்தியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்ட இவர் அங்கு சில தெலுங்கு படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர் வட்டாரத்தை அதிகளவு கொண்டிருக்கிறார்.

தமிழைப் பொறுத்த வரை விக்ரம் வேதா, சர்க்கார், இரவின் நிழல் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர் சில மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இவர் நடிப்பில் வெளி வந்த வீர சம்ஹா ரெட்டி, மைக்கேல், ஹனுமான் போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அப்பா முன்னாடியே அத பண்ணாரு..

திரைப்படங்களில் பிஸியாக நடித்த வரலட்சுமி மும்பை தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் உடன் காதல் கொண்டதை அடுத்து பெரியவர்களின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்கள்.

அதில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால் மிகப்பெரிய தொழிலதிபரான நிக்கோலாய் ஏற்கனவே திருமணம் ஆகி 15 வயதில் ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் வரலட்சுமி அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற விஷயம் ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வருங்கால கணவர் குறித்து கூச்சமின்றி..

இந்நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு பல்வேறு பேட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி தன்னுடைய வருங்கால கணவர் குறித்து பேசி இருக்கும் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விஷயத்தில் இவர் நிக்கோலாய் சச்தேவ்வை 16 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்து பேசி இருப்பதாகவும் அப்போது அவர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இந்த சமயத்தில் இருவருக்கும் இடையே எந்த ஒரு நெருக்கமும் பழக்கமோ கிடையாது. பல ஆண்டுகள் கழித்து எங்களது குடும்பம் நார்வைக்கு ஃபேமிலி டூர் சென்ற போது என் பெற்றோர் முன்னிலையில் நிக்கோலாய் காதலை சொன்னார்.

அது மட்டுமல்லாமல் அவர் என் மீது வைத்திருந்த பாசம், அக்கரை, என் ப்ரொபஷன் மீது கொண்டிருந்த ஈடுபாடு போன்றவற்றை பார்த்த பிறகு தான் எனக்கு அவர் மீது காதல் வந்தது என தனது வருங்கால கணவர் குறித்து நடிகை வரலட்சுமி பேசியிருக்கிறார்.

மேலும் திரைப்படங்களில் மட்டும் தான் வில்லியாக நடித்திருப்பதாகவும் இயல்பாக மிகச்சிறந்த ரொமான்டிக்கான பெண்ணாக இருப்பவர் என்ற கருத்தை வெளியிட்டு இருக்கும் வரலட்சுமி, உலகில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் ரொமான்டிக்கான வராகத்தான் இருப்பார்கள்.

 இது அவருக்கு கிடைக்கும் லைஃப் பார்ட்னரை பொறுத்து அவரது ரொமான்ஸ் வெளிப்படும் என்பதை அழகாக தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்களால் அதிகமாக பேசப்படுகின்ற பேசும் பொருளாக இந்த விஷயம் மாறிவிட்டது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version