மார்பின் மீது பயங்கரமாக மிதித்தித்தான்.. ரகசியம் உடைத்த நடிகை வரலட்சுமி..!

நடிகை வரலட்சுமி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் ஆவார்.

வாரிசு நடிகையான வரலட்சுமி 2012-ஆம் ஆண்டு நடிகர் சிம்புவோடு இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.

நடிகை வரலட்சுமி..

இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமிக்கு 2016-ஆம் ஆண்டு வெளி வந்த தாரை தப்பட்டை என்ற திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆகக் கூடிய வகையில் பேமஸை பெற்று தந்தது.

இதை அடுத்து தமிழில் போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று அங்கு செட்டில் ஆகிவிட்ட இவர் பல தெலுங்கு முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

அடுத்து அண்மையில் இவருக்கு மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்றது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் இவரது நிச்சயதார்த்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளி வந்து வைரலானது.

மார்பின் மீது பயங்கரமாக மிதித்தான்..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த பயங்கரமான அனுபவத்தை பற்றி சிரித்த படி பகிர்ந்து இருக்கிறார் நடிகை வரலட்சுமி.

அந்தப் பேட்டியில் அவர் பேசும் போது தாரை தப்பட்டை படத்தில் நடிக்கும் போது பார்த்து மிதிடா ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு மிதிக்காத என்று நான் கூறியிருந்தேன். எனினும் அதை மீறி அந்த காட்சியில் அந்த இடத்தில் என்னை அழுத்தி மிதித்து விட்டார்.

எப்படி மிதிக்கும் போதே லேசாக சத்தம் வந்ததை எடுத்து நிச்சயமாக எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கும் என்று நான் கருதுகிறேன். எனினும் அதை மனதுக்குள் வைத்துக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு பாலா சாரிடம் படப்பிடிப்பு முடிந்ததா என கேட்டேன்.

எனக்கு அவர் சிரித்த படி நடந்து முடிந்து விட்டது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர் கழுத்தில் அணிந்து இருந்த சங்கிலியை எனக்கு போட்டு என்னை பாராட்டினார்.

உடைந்த ரகசியம்..

எதற்காக இப்போது படப்பிடிப்பு முடிந்து விட்டதா என்று கேட்கிறாய் என்று பாலா சார் கேட்க சார் மிதிக்கும் போதே என் காலர் போன் உடைந்தது போல எனக்குள் ஒரு பீல் வந்தது.

எனவே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன் என்று கூறினேன்.

அதனை அடுத்து மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து பார்த்த போது என் காலர் போன் முறிவு ஆகியிருந்தது. எனினும் அதை பொருட்படுத்தாமல் நான் நடித்ததை என்றும் பாலா சார் பலர் மத்தியிலும் சொல்லி என்னை பாராட்டி இருக்கிறார் என்று பகிர்ந்து இருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் மார்பின் மீது பயங்கரமாக தாரை தப்பட்டை படத்தில் நடித்த போது மிதித்த நிகழ்வினை கூறியதோடு தன்னுடைய காலர் எலும்பு முறிவு ஏற்பட்டதில் ரகசியத்தை உடைத்த வரலட்சுமி அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டதோடு மட்டுமல்லாமல் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளிய விஷயமாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version