தமிழ் சினிமாவில் தனது தந்தை மூலமாக வாய்ப்பை பெற்று பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாருக்கு சிறுவயது முதலே சினிமாவின் மீது பெரிதாக ஈடுபாடு கிடையாது.
ஆனால் வளர்ந்த பிறகு அவருக்கு நடிப்பின் மீது ஈடுபாடு வந்தது. ஆனால் சரத்குமாரை பொறுத்தவரை தனது மகள் சினிமா துறையில் நடிக்க கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்திருக்கிறார் சரத்குமார். பிறகு பல வருடங்கள் தொடர்ந்து சரத்குமாரிடம் கேட்டு கொண்ட பிறகுதான் வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.
சினிமாவில் அறிமுகம்:
போடா போடி என்ற விக்னேஷ் சிவன் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். அந்த திரைப்படத்தில் அவருக்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகமாக கிடைத்தது என்றாலும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு சினிமா துறையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் தாரை தப்பட்டை. இந்த திரைப்படத்தில் ஆசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் வரலட்சுமி சரத்குமார்.
பொதுவாகவே பாலா மிஷ்கின் மாதிரியான இயக்குனர்கள் அவர்களது திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களிடம் இருந்து நடிப்பை உறிஞ்சி வாங்கி விடுவார்கள். அதனால் அவர்களது திரைப்படங்களில் நடிக்கும் பொழுது எந்த ஒரு நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதை பார்க்க முடியும்.
பாலா படத்தில் வாய்ப்பு:
நடிப்பில் பெரிதாக அனுபவம் இல்லாத நடிகர் ஆர்யாவே நான் கடவுள் திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருப்பதை பலரும் பார்த்திருக்க முடியும் இந்த நிலையில் தாரை தப்பட்டை திரைப்படத்தில் நடந்த அசம்பாவிதம் ஒன்றை பேட்டியில் பேசியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
அந்த படத்தில் ஒரு காட்சியில் வரலட்சுமி சரத்குமாரை கீழே போட்டு அவரது நெஞ்சில் ஆர்.கே சுரேஷ் மிதிப்பது போன்ற காட்சி இருக்கும். ஆர்.கே சுரேஷ் ரியலாக அந்த காட்சி வரவேண்டும் இல்லை என்றால் பாலா விடமாட்டார் என்று நிஜமாகவே வரலட்சுமி சரத்குமாரை போட்டு மிதித்திருக்கிறார்.
ஆனால் அந்த காட்சி துவங்கும் முன்னே வரலட்சுமி சரத்குமார் மெதுவாக மிதிக்குமாறு ஆர்.கே சுரேஷிடம் கூறியிருக்கிறார். இருந்தாலும் ஆர்.கே சுரேஷ் வேகமாக மிதித்த காரணத்தினால் அவருடைய மார்பு எலும்பு விரிசல் அடைந்து விட்டது.
இருந்தாலும் அந்த காட்சியை நிறுத்தாமல் நடித்திருக்கிறார் வரலட்சுமி ஏனெனில் அந்த காட்சி பாதியில் நிறுத்தப்பட்டு விட்டால் திரும்பவும் முதலில் இருந்து அதை எடுக்க வேண்டும் என்பதால் அமைதியாக இருந்துவிட்டு பிறகு படப்பிடிப்பு முடிந்ததும் மருத்துவமனைக்கு கிளம்பி சென்று இருக்கிறார். அந்த காட்சிக்காக அந்த இடத்திலேயே தான் போட்டிருந்த தங்கச்செயினை கழட்டி வரலட்சுமிக்கு போட்டு விட்டாராம் பாலா. இந்த நிகழ்வை வரலட்சுமி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.