உண்மையை மறைச்சுட்டாங்க..! கேப்டனுக்கு என்ன நோய் என்று தெரியுமா..? பிரபல நடிகர் பரபரப்பு வீடியோ!

நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு என்பது தமிழக மக்களுக்கு மிகப்பெரிய வேதனை தந்த சம்பவமாக அமைந்தது. பலரும் அவரது நல்ல குணங்களை அறிந்தவர்கள் என்பதால், அப்படி வாழ்ந்த மனிதருக்கு இப்படி ஒரு அவல நிலையா என நினைத்துதான் கண்ணீர் விட்டனர்.

ஏனெனில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாகவே பலவிதமான உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தவர்தான் விஜயகாந்த். போலீஸ் உடையில் எந்த நடிகருக்கும் இல்லாத கம்பீரமும், அழகும் விஜயகாந்துக்கு மட்டுமே இருந்தது. அப்படிப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் பலவீனமான நிலையில் கடைசியாக தேமுதிக அலுவலகத்துக்கு வந்ததை பார்த்து தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கதறி கதறி அழுதனர்.

இதுகுறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறுகையில், ஞாபக மறதி, ஹைபர் டென்சன், நுரையீரல் பிரச்னை, முடக்குவாதம், தொண்டையில் பிரச்னை, கடைசி கட்டமாக அவருக்கு வந்த கொரோனா தொற்று, நிம்மோனியா போன்ற பல உடல் பாதிப்புகள் இருந்துள்ளன. ஆனால் இதற்காக என்னென்ன சிகிச்சைகள் அவருக்கு தரப்பட்டது என்றே தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் அவருக்கு கண்பார்வையும் பாதிக்கப்பட்டது. நடக்கவும், நிற்கவும், உட்காரவும் கூட அவரால் முடியவில்லை. மற்றவர்கள் உதவியின்றி அவரால் எதுவுமே செய்ய முடியாத கோமா நிலையில்தான் அவர் நினைவை இழந்து இருந்துள்ளார். சர்க்கரை நோயும் இருந்துள்ளது. ஆனால் உடலில் அவருக்கு இவ்வளவு பிரச்னைகள் இருந்தும், கோடி கோடியாக அவரிடம் பணம் இருந்தும் அவரை ஏன் கடைசி வரை குணப்படுத்தாமல் விட்டனர் என்றே தெரியவில்லை.

கேப்டன் விஷயத்தில் எல்லா உண்மைகளையும் ஏன் மறைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், ஒருநாள் இதுகுறித்து கேப்டனின் உண்மையான விசுவாசிகள் கேள்வி கேட்கும் போது அதற்கு பிரேமலதா கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam