சித்ரா குரலில் வெளியானது வாரிசு படத்தின் மூன்றாவது பாடல்..!

 தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவிட்ட படம் தான்  இந்த திரைப்படமானது வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளி வரவுள்ளது.

ஏறக்குறைய படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தை வம்சி இயக்குகிறார். மேலும் படமானது தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளிவர உள்ளது.

இந்தப் படத்தில் விஜய்யோடு இணைந்து ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்திருக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷியாம், யோகி பாபு உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் அழகாக நடித்திருக்கிறார்கள்.

அண்மையில் தான் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே என்ற பாடலும் தீ தளபதி பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதோடு தற்போது பட்டி தொட்டி எங்கும் கேட்கக்கூடிய பாடல்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வரக்கூடிய சூழ்நிலையில் இதன் பிரமோஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் மூன்றாவது பாடலான சோல் ஆப் வாரிசு என்ற பாடல் வெளிவரக்கூடிய நிலையில் என்ன பாடல் குறித்த சிறிய தொகுப்பு அடங்கிய ப்ரோமோவை பட குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பாடகி சித்ரா குரலில் வெளியாகி இருக்கும் ப்ரோமோ ஆனது ரசிகர்களின் மனதை தாலாட்டி உள்ளது.

மேலும் அடுத்த இந்த மூன்றாவது பாட்டும் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆதரவு பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

விரைவில் இந்த படம் எப்போது வரும் என்று விஜய் ரசிகர்கள் காத்திருப்பதால் படம் பட்டையை கிளப்புவதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அதிக அளவு வசூலை பெறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …