வாரிசு படத்தின் க்ளைமாக்ஸ்..! – கடைசி 5 நிமிடங்கள் இப்படி ஒரு காட்சியா..?

தெலுங்கு சூப்பர் ஹிட் இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் இளைஞர்களை சுண்டி இழுத்து தன் பாக்கெட்டில் வைத்து இருக்கும் இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படமானது அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்திருக்கிறார். மேலும் படத்திற்கான இசையை தமன் உருவாக்கி இருக்கிறார்.ஏற்கனவே இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளிவந்து பட்டையை கிளப்பி ரசிகர்களின் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் படம் திரைக்கு வெளிவருவதற்கு முன்பே பாதி லாபத்தை பார்த்து விட்டதாக தகவல்கள் வெளிவந்திருக்கிறது.

அதன் அடிப்படையில் தற்போது வாரிசு திரைப்படமானது 250 கோடிக்கு மேல் லாபம் பார்த்து இருக்கிறது. அதனை அடுத்து 55 சதவீத லாபத்தை பட ரிலீஸுக்கு முன்பாகவே இந்த படம் சம்பாரித்து சாதித்து விட்டது.

இந்தப் படம் ஷூட்டிங் ஆரம்பித்த நாள் முதல் தற்போது வரை அடிக்கடி அப்டேட்டுகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ராஸ்மிகாவுடன் காதல் பாடலுக்கு விஜய் நடனமாடிய காட்சிகளும் இணையத்தில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து படப்பிடிப்பின் சமயத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் அதனை அடுத்து இணையத்தில் எதுவும் லீக் ஆகவில்லை.

இந்த படத்தின் கிளைமேக்ஸ் படம் பிடிப்பதற்காக ஹைதராபாத்தில் படப்பிடிப்புகள் நடக்க உள்ள நிலையில் என்ன கிளைமேக்ஸ் ஷூட்டிங்கில் படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா இடம் பிடிப்பார் என தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த கிளைமாக்ஸ் முழுவதும் எமோஷனலான ஆக்ஷன் நிறைந்த படி இருக்குமாம். மேலும் இந்த படத்தில் ஸ்டண்ன்ட் மாஸ்டராக பணிபுரிந்து வரும் திலிப் சுப்பராயன் கிளைமாக்ஸ் காட்சி பற்றி பேசும்போது மாஸ்சாக அக்காட்சி வந்திருப்பதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆகி இருப்பதால் ஒட்டுமொத்த பட குழுவினரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

தீவிர பாதுகாப்பை கருத்தில் கொண்டு கட்டுப்பாடோடு படப்பிடிக்கப்பட்ட எந்த காட்சிகள் எப்படி லீக் ஆனது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் பட குழுவானது. இதை ஷேர் செய்யாமல் ரசிகர்களை தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …