வாரிசு-க்கு குறைவான திரையரங்குகள் – தயாரிப்பாளர் தில் ராஜூ பரபரப்பு பேச்சு..! – வெடிக்கும் சர்ச்சை..!

நடிகை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தை பிரபல இயக்குனர் வம்சி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ஹீரோயின் என அனைவருமே தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள்.

நடிகர் விஜய் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும்போது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழ் நடிகர் ஏன் தெலுங்கு தயாரிப்பாளரின் படங்களில் நடிக்க வேண்டும். ஏன் இங்கு தயாரிப்பாளர்களே இல்லையா..? என்றுகூட பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

வெளியே ஜாவ் சொன்ன தெலுங்கு திரையுலகம்

அந்த பேச்சுகளுக்கு எல்லாம் விடை கொடுக்கும் விதமாக நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை தெலுங்கானா மற்றும் ஆந்திர திரையரங்குகளில் பொங்கல் பண்டிகை அன்று வெளியிடக்கூடாது. இரண்டு வாரம் கழித்துதான் வெளியிட வேண்டுமென்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

ஒரு தெலுங்கு படம் கூட இங்க ரிலீஸ் ஆகாது.. பாத்துருவோமா..?

இந்த விவகாரம் அரசியல் பிரச்சனையாக மாறும் அளவுக்கு சென்றது. இன்னும் சொல்லப்போனால் அது அரசியல் பிரச்சனையாக மாறிவிட்டது என்று கூறலா. காரணம், தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய அரசியல் சார்ந்த இயக்குனர்கள் சிலர் ஒரு தமிழரின் படம் என்பதால் தெலுங்கில் நீங்கள் வெளியிட கூடாது என்று தடை விதித்தால்.. இனிமேல் ஒரு தெலுங்கு நடிகரின் கூட தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது என்று கடுமையாக தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தெலுங்கானாவில் தான் பிரச்சனை என்று பார்த்தால் தமிழில் அதற்கு மேல் பிரச்சனை இருக்கிறது. காரணம் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகை அன்று தான் வெளியாகிறது.

துணிவுக்கு 80% – வாரிசுக்கு 20%

ஆனால் முதல் கட்டமாக நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள 80 சதவீத திரையரங்குகளை புக் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. கிட்டத்தட்ட அந்த தகவல் உண்மை தான் என்றும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அப்படி பார்க்கும்போது நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு 15 முதல் 25 சதவீதம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். திரையரங்குகளின் எண்ணிக்கையை கணக்கை வைத்து பார்த்தால், வெறும் 150 முதல் 200 திரையரங்குகளில் தான் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

நடிகர் விஜயின் திரைப்படங்கள் இவ்வளவு குறைவான அளவிலான திரையரங்குகளில் வெளியானதே கிடையாது. மறுபக்கம் நடிகர் விஜய் படமோ..? நடிகர் அஜித் படமோ..? இரண்டு படங்களுக்கும் சரிசமமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எனவே சரிசமமான தியேட்டர்களை ஒதுக்கீடு செய்வதுதான் நியாயமாக இருக்கும் என்று விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விவகாரம் பற்றி நம்முடைய தளத்திலேயே கூட நேற்று சில தகவல்களை பார்த்திருந்தோம்.

சென்னையில் தில் ராஜூ..

இந்நிலையில் சென்னைக்கு வந்து இருக்கக்கூடிய வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்தான் நம்பர் ஒன் அவருடைய படத்திற்கு அதிக திரையரங்குகள் கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறியதுடன் இது குறித்து நான் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேச போகிறேன் என்று பேட்டி எடுத்திருக்கிறார்.

இவருடைய இந்த பேச்சு திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது. மேலும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கூட இதுவரை நடக்கவில்லை. கடந்த ஆட்சி காலத்தில் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இசை வெளியீட்டு விழா என்ற பெயரில் ஒரு அரசியல் மாநாடு ரேஞ்சுக்குத் நிகழ்ச்சிகளை நடத்தி வந்த நடிகர் விஜய்.

தற்போது இசை வெளியீட்டு விழா கூட இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்கிறார். ஆனால் தம்முடைய ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக விருந்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தன்னை சந்திக்கும் வாய்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய்.

மறுபக்கம் நடிகர் விஜயின் மேல் இருக்கக் கூடிய அரசியல் அழுத்தம் தான் வாரிசு திரைப்படத்திற்கு தமிழகத்தில் குறைவான திரையரங்குகளில் எண்ணிக்கையை கொடுப்பதற்கான காரணமாக இருக்கிறது என்று கிசுகிசுக்கும் அரசியல் நோக்கர்களும் இருக்கிறார்கள்.

சவுக்கு on வாரிசு..

சமீபத்தில் பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் அவர்கள் கூட தன்னுடைய கருத்தை ஒரு பேட்டியின்போது பதிவு செய்திருந்தார். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதன் காரணமாக அவருக்கு அவருடைய படத்திற்கு குறைவான திரையரங்குகள் அதாவது வெறும் 20 சதவீத திரையரங்குகளில் மட்டும் ஒதுக்கினால் அவர் எப்படி அமைதியாக இருப்பார்.

அதனால் தான் ரசிகர்களை சந்தித்து தன்னுடைய பலத்தை காட்டி வருகிறார். இப்படியான விஷயங்களில் ஆளும் அரசு தலையிடாமல் இருப்பது தான் சரியானதாக இருக்கும். இது அரசின் மீதான அதிருப்தியை அதிகப்படுத்தும் என்றும் பதிவு செய்திருந்தார்.

பொதுவாகவே நடிகர் விஜய் படம் என்றாலே பிரச்சனைகள் வருவது இயல்புதான். ஆனால் இந்த முறை வித்தியாசமாக வந்திருக்கிறது. திரையரங்குகள் கிடைக்காது என்ற நிலைதான் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு இருக்கிறது.

இது எப்படி சரியான போட்டியாக இருக்க முடியும்..

வெறும் 20% திரையரங்குகளில் படம் வெளியாகும் போது நிச்சயமாக அது சரியான போட்டியாக இருக்காது. சரிசமமான திரையரங்குகளில் வெளியாகும் போது தான் இரண்டு திரைப்படங்களுக்கும் சரியான போட்டி என்று பார்க்கமுடியும் படம் வெளியான பிறகு இந்த படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்த படம் ரசிகர்களை கவரவில்லை என்பதை ரசிகர்கள் முடிவு செய்ய வேண்டியது. அதன் பிறகு எந்தப் படமும் நன்றாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறதோ அந்த படத்திற்கு திரையரங்குகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம் காட்சிகளை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் ரிலீஸ் செய்யும்போதே ஒரு படத்திற்கு மட்டும் 80% திரையரங்குகள் இன்னொரு படத்திற்கு வெறும் 20 சதவீதம் சரியாக என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என்று பொதுவான சினிமா ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இப்படி இருக்க வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ள இந்த பேட்டி பெரும் பரபரப்பை கிளப்பி விட்டிருக்கிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …