மீண்டும் மற்றப்பட்ட “வாரிசு” ரிலீஸ் தேதி..! – குழப்பத்தில் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடைசி நேரத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. முன்னதாக ஜனவரி 13ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது.

அதன் பிறகு நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் 12ஆம் தேதி வெளியாகும் என படக்குழு முயற்சி எடுத்துக் கொண்டு இருந்தது. ஆனால் அறிவிப்பு ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்தனர்.

இதனை தொடர்ந்து ஜனவரி 12-ஆம் தேதி வாரிசு திரைப்படம் வெளியாகும் என தகவல்களை கசிய விட்டது. கடைசியாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக கூடிய படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி ஜனவரி 11 என்று வெளியானது.

இதனைத்தொடர்ந்து அதற்கு அடுத்த நாளே வாரிசு திரைப்படமும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை நேரடியாக தயாரிப்பு நிறுவனமே தமிழக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்திருந்தது.

ஆனால், அந்த நிறுவனத்தால் தமிழ்நாட்டில் வெறும் 20% திரையரங்குகளில் கூட பெற முடியவில்லை. அதன்பிறகு நடிகரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாரிசு திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்றது.

அதன் பிறகு 50 சதவீத திரையரங்குகள் வாரிசு திரைப்படத்திற்கு கிடைத்தது. கிட்டத்தட்ட சம அளவிலான திரையரங்க எண்ணிக்கைகளுடன் வாரிசு மற்றும் திரைப்படங்கள் மோதிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் வாரிசு ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட குழப்பம் ரசிகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எதற்காக இத்தனை முறை ரிலீஸ் தேதியை மாற்றியது வாரிசு படக்குழு என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version