“டே.. ஏன்டா.. இப்படி பண்ற..” வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாம் செய்த வேலை.. நொந்து போன விஜய்..

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் பற்றி அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் அண்மையில் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து எதிர்வரும் 2026-ஆம் ஆண்டு முழு நேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படத்தில் நடித்து வருவதோடு தளபதி 69 படத்தோடு திரைப்படங்களில் நடிப்பதில்லை என்ற அறிவிப்பை செய்ததை அடுத்து ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார்கள்.

தளபதி விஜயின் வாரிசு..

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த படத்திற்கு முன்பாக 2023 ரிலீசான வாரிசு திரைப்படத்தை தில்ராஜ் தயாரித்திருந்தார்.

இதையும் படிங்க: புலித்தோல் போர்த்திய பசு.. உடலோடு ஒட்டிய உடையில்.. சிக்கென நிற்கும் நமீதா.. வைரல் போட்டோஸ்..!

மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்ததோடு ஜனவரி 11 2023 எந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளி வந்தது. இந்தப் படம் சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியை தளபதிக்கு தரவில்லை, என்றாலும் இந்த படத்தில் இடம் பிடித்த ரஞ்சிதமே ரஞ்சிதமே திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஓலித்தது.

தளபதி 66 என்று பெயர் சூட்டப்பட்ட இந்த திரைப்படம் சி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் விஜயின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வாரிசு என்ற பெயரில் வெளி வந்து ரசிகர்களை கவர்ந்தது. அத்தோடு இந்த படத்தில் முதன் முதலாக தமன் எஸ் இசையமைக்க 6 பாடல்கள் அத்தனையும் பாடல் ஆசிரியர் விவேக் எழுதி இருப்பார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாம் செய்த வேலை..

இந்த படத்தில் இடம் பிடித்த தீ தளபதி பாடலை சிலம்பரசன் பாடி இருப்பார். மேலும் படம் படப்பிடிக்கப்பட்ட சமயத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ஷாம் செய்த வேலையை பார்த்து நொந்து போன விஜய் பற்றிய விவரங்கள் தற்போது வெளி வந்துள்ளது.

இந்த சுவாரசியமான சம்பவங்கள் பற்றி நடிகை சங்கீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியதாவது படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் எப்போதும் அமைதியாக இருப்பார்.

ஆனால் நடிகர் ஷாம் நடிகர் விஜய்யை எப்போது பார்த்தாலும் தளபதி.. தளபதி.. ஆணையிடுங்கள். காத்திருக்கிறேன் என்ன செய்ய வேண்டும்.. என்று அட்ராசிட்டி செய்து கொண்டே இருப்பார்.

நொந்து போன விஜய்..

ஆனால் தளபதி விஜய் படப்பிடிப்பு தளத்தில் தான் எங்கே இருக்கிறேன் என்பதை யாருக்கும் தெரியக்கூடாது என்ற அளவுக்கு அமைதியை கடைப்பிடிப்பார்.

ஆனால் நடிகர் ஷாம் எப்போதும் இப்படி அட்ராசிட்டி செய்து கொண்டே இருப்பதால் கடுப்பாக்கிப் போன நடிகர் விஜய் ஏன்டா இப்படி பண்ற.. அமைதியா இருடா சாமி என்றும் சத்தம் போடாமல் இரு என்று சொல்லுவதோடு அமைதியாக இருப்பார்.

இதையும் படிங்க: இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது.. கண்ணு கூசுதே.. பூர்ணாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகர் விஜய் அமைதியை விரும்பக்கூடிய ஒரு நபர் என ஏற்கனவே கூறிய நடிகை சங்கீதா அவருடைய அமைதியும், பொறுமையும் தான் அவருடைய மிகப்பெரிய வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் என்று கூட கூறலாம் என பதிவு செய்திருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகிப் போனதோடு வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாம் செய்த வேலையைப் பார்த்து நொந்து போன விஜயின் விஷயம் இதுதானா? என்று ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு கேட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version