பொங்கலன்று ஒரே நாளில் தல துணிவு… தளபதி விஜய் வாரிசு… ரிலீஸ் இல்லையா? விவரம் உள்ளே…?

 வரும் பொங்கல் பண்டிகைக்கு மாஸ் படங்களான துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளிவரும் என்ற தகவல்களை கேள்விப்பட்டு தல ரசிகர்கள் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் இருந்தார்கள்.

 நீண்ட நாள் கழித்து இந்த இரண்டு நடிகர்களின் படமும் நேருக்கு நேர் மோத உள்ளதாக கூறி வந்த நிலையில் அந்தப் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகாத என்ற தகவலை பிரபல நடிகர் கூறி இருப்பது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 மேலும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு படத்தை வம்சி இயக்க எந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். இதில் குஷ்பூ, பிரபு, சியாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், சங்கீதா  போன்ற ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அதுபோல இந்த படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

மேலும் துணிவு படத்தில் தல அஜித் குமார் நடிக்க எச்.வினோத் இயக்கியிருக்கிறார், இதில் அஜித்துடன் மஞ்சு வாரியார், பிக் பாஸ் பிரபலங்களான பவானி, அமீர், சிபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

 நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு படங்களுமே வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று ரசிகர்களுக்கு விருந்தாக உள்ள நிலையில் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே என்று உள்ளதால் இரு படங்களின் ரிலீஸ் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 இதனை அடுத்து இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகாது என நடிகர் மகத் ராகவேந்திரா தெரிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 சமீபத்தில் அளித்த பேட்டியில் துணிவு படம் தான் முதலில் ரிலீஸ் ஆகும் என நான் கேள்விப்பட்டேன். வாரிசு படம் மூன்று அல்லது நான்கு நாட்கள் தள்ளி ரிலீஸ் ஆகலாம் என கூறியுள்ளார் நடிகர் மகத்.

 ஏற்கனவே அஜித்துடன் மங்காத்தா படத்திலும் விஜய் உடன் ஜில்லா படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். எது முதலில் உண்மையாக வரும் என்ற விஷயம் தெரியாமல் அவரது ரசிகர்கள் தவித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …