துணிவு 80% – வாரிசு 20% – திரைமறைவில் நடக்கும் மகா யுத்தம்..! – மௌனம் காக்கும் திரையுலகம்..!

விரைவில் வெளியாக உள்ள நடிகர் அஜித்தின் “துணிவு” திரைப்படத்திற்கும் தளபதி விஜய்யின் “வாரிசு” திரைப்படத்திற்கும் தியேட்டர்களை பிடிப்பதில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் துணிவு படத்திற்கு ஏற்கனவே 80 சதவீத திரையரங்குகளை புக் செய்து விட்டார்கள் என்றும் இதற்கு அந்த படத்தை விநியோகிக்க உள்ள பெரிய இடத்து தயாரிப்பு நிறுவனம் தான் காரணம் என்றும் தகவல்கள் கோடம்பாக்க வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வெளியில் பார்ப்பதற்கு இது ஏதோ சாதாரணமான விஷயம் என்று தெரிந்தால் கூட உள்ளே ஒரு மகாயுத்தம் நடந்து கொண்டிருக்கிறது என்று தான் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

காரணம் நடிகர் அஜித்தாக இருந்தாலும் சரி தளபதி விசாக இருந்தாலும் சரி இருவரும் சரி சம பலம் கொண்டவர்கள். இதில் ஒரு நடிகருக்கு மட்டும் 80 சதவீத திரையரங்குகளை கொடுத்துவிட்டு இன்னொரு நடிகருக்கு வெறும் 20 சதவீத தியேட்டர்களை மற்றும் ஒதுக்குவது என்பது ஓரவஞ்சனை.

மேலும், நடிகர் விஜய் மேல் இருக்கும் அரசியல் சம்பந்தமான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவருக்கு குறைவான தியேட்டர்களை ஒதுக்குகிறார்கள் என்றும் கிசுகிசுக்கிறார்கள். இதனை சற்றும் எதிர்பாராத நடிகர் விஜய் மிகுந்த கோபத்தில் இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாவது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்றாலும் கூட இந்த முறை நடிகர் அஜித்தின் கை ஓங்கி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். இதற்கு காரணம் நடிகர் அஜித் அல்ல.. நடிகர் விஜய் நடிகர் சம்பாதித்து வைத்துள்ள அரசியல் சம்பந்தமான எதிர்ப்புகள் என்றுதான் கூறுகிறார்கள்.

கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருக்கும் நடிகர் விஜய்.. வாரிசு படத்தை தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்தால் தான் போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற சூழல் நிலவும் நிலையில் வெறும் 20 சதவீத திரையரங்குகள் என்றால் 150 முதல் 200 திரையரங்குகளில் தான் கிடைக்கும்.

இதனை வைத்துக்கொண்டு படத்தின் பட்ஜெட் மற்றும் ஹீரோவின் சம்பளம் ஆகியவற்றை எடுப்பது என்பது குதிரைக் கொம்பாக மாறிவிடும். இதில் இன்னுமொரு அதிர்ச்சி என்னவென்றால் இந்த விவகாரத்தில் ஒட்டு மொத்த திரையுலகமே வாய் மேல் விரல் வைத்து மௌனமாக இருப்பது தான்.

அப்படி இருக்கும் பொழுது இரண்டு நடிகர்களுக்கும் சம அளவில் திரையரங்குகளை ஒதுக்குவது மட்டுமே சரியான முடிவாக இருக்க முடியும் என்று இரு தரப்பு ரசிகர்களுமே தங்களுடைய விருப்பங்களை இணையத்தில் பதிவு செய்வதை பார்க்க முடிகிறது.

இந்த விவகாரத்தால் மிகுந்த கோபத்தில் இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய பலத்தை காட்ட வாரம் ஒரு முறை தன்னுடைய ரசிகர்களை அழைத்து அவர்களுக்கு விருந்து வைத்து உபசரித்து வருகிறார். தன்னுடைய ரசிகர் பலத்தை காட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இயங்கி வருகிறார் நடிகர் என்று ஒரு தரப்பினரால் கூறப்படுகிறது.

பொதுவாகவே லீடர் நடிகர் படம் வெளியாகும் முன்பே இசை வெளியீட்டு விழாக்கள் நடப்பது சாதாரண விஷயம். அரசியல் மாநாடு ரேஞ்சுக்கு இந்த இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகள் இருக்கும். ஆனால் இந்த முறை இசை வெளியீட்டு விழா எல்லாம் நடத்தக் கூடாது என்று பெரிய இடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று கிசுகிசுகிரார்கள்.

இதனால் ரசிகர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவே ரசிகர்களுக்கு விருந்து நிகழ்ச்சிகள் மூலம் தன்னை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறார்  நடிகர் விஜய் என்றும் கூறுகிறார்கள்.

பொதுவாக பண்டிகை நாட்களில் படங்கள் வெளியாகும்போது திரையரங்குகளை புக் செய்வதில் போட்டி நிலவுவது உண்மைதான். என்றாலும் இந்த அளவுக்கு ஓரவஞ்சனை ஆக எந்த வருடமும் நடந்தது கிடையாது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த விமர்சனங்களை எல்லாம் என்ன பதில் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது போதாது என்று.. வாரிசு படத்தை பொங்கல் பண்டிகையன்று வெளியிட கூடாது.. இரண்டு வாரம் கழித்து தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ஆந்திரா மற்றும் தெலுங்கனா திரையரங்குகளுக்கு ரகசிய கட்டளையிட்டுள்ளது தெலுங்கு திரையுலகம் என்ற பேச்சு வேறு அக்கட தேசத்து ஊடகங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …