.ரஞ்சிதமே ரஞ்சிதமே இந்தியாவை மட்டுமல்ல பல நாடுகளில் ட்ரெண்டிங்காக… விஜய் பாடலுக்கு இவ்வளவு வரவேற்பா…!!

 தமிழ் சினிமாவின் உச்சகட்ட நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தில் படுஜோராக நடித்து முடித்திருக்கிறார். மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

 மேடம் இந்தப் படத்தோடு தல அஜித்தின் துணிவு படமும் பொங்கலில் களமிறங்க இருப்பதால் அஜித் மற்றும் விஜய்யின் ரசிகர்கள் மிகப் பரபரப்பாக இருக்கிறார்கள்.

 இதனை அடுத்து வாரிசு படத்திலிருந்து தற்போது ரஞ்சிதமே எனும் ஒரு பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகிவிட்டது. மேலும் இந்தப் பாடல் ஆனது இந்தியா மற்றும் இன்றி 13 நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருந்து வருவது தான் மிக முக்கியமான ஹைலைட் ஆகும்.

 இந்தப் பாடலை பல லட்சக்கணக்கான பேர் youtube மற்றும் ஏனைய மீடியாக்களில் பார்த்து வருவதால் இந்த பாடலுக்கு அவ்வளவு  view வை குவிந்து இருக்கிறார்கள் என்று கூறலாம்.

வெறித்தனமாக விஜய்யின் பாடலை கேட்டு வரும் அனைவரும் அதுக்கு லைக் மட்டும் போடுவதோடு நின்றுவிடாமல் இவரது படத்தை ஏகோபித்த மனதோடு வரவேற்றுக் காத்திருப்பதாகவும் கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள்.

 இதனை அடுத்து மாஸ் காட்டி வரும் இந்த பாடலுக்கு இணையாக வேறு எந்த பாடல் தற்போது உள்ளது என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் இது ஏற்படுத்தி உள்ளது.

எனவே மிக விரைவில் பொங்கலுக்கு வரவிருக்கும் இந்தத் திரைப்படம் மாஸ் வெற்றியை தருவதோடு மட்டுமல்லாமல் விஜய்யின் கேரியருக்கு மிகச் சிறப்பான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

மேலும் ஒரு சிலர் ட்ரெண்டிங்காக இருக்கும் இந்த பாடலானது  மொச்சைக்கொட்டை பல்லழகி என்ற பாடலின் காப்பி என்று வறுத்து எடுத்து வருகிறார்கள்.

 இதையும் மீறி இந்த பாடல் ஒரு மாஸ் வெற்றியை தந்திருக்கிறது என்றால் அது விஜய்க்காக மட்டும் தான் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …