வர்ஷா பொல்லம்மா : இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் திகில் இந்த திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக சில காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை வர்ஷா பொல்லம்மா.
இந்த படத்திற்கு முன்பு பல படங்களில் இவர் நடித்திருக்கிறார் என்றாலும் கூட பிகில் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் அவரிடம் புகைப்படக்கலை கற்கும் மாணவியாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று கூறலாம். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது.
இதனால் இந்த படத்தில் நடித்திருந்த பல நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்கள். அதில் ஒருவர் நடிகை வர்ஷா பொல்லம்மாவும் ஒருவர். பெண்கள் கால்பந்து அணியை மையக் கருவாகக் கொண்டு உருவாகியிருந்த இந்த கதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த படத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை வர்ஷா பொல்லம்மா. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சத்திரம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை என்று தான் கூற வேண்டும். அதன்பிறகு வெற்றிவேல், இவன் யாரென்று தெரிகிறதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் இவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிய திரைப்படம் 96 மற்றும் பிகில் என்ற இரண்டு திரைப்படங்கள் தான். தெலுங்கிலும் நடித்து இருக்கிறார். ஆனால் படு கிளாமரான காட்சிகளில் தெலுங்கு சினிமாவில் தோன்றியிருக்கிறார்.
அப்படி அவர் வெளியிட்டிருந்த அவர் நடித்த படங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பிகில் படத்தில் குடும்பம் குத்து விளக்காக நடித்திருந்த நடிகை வர்ஷா பொல்லம்மாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.