பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான குழந்தையாக பார்க்கப்பட்டவர் தான் ஷ்ரத்தா கபூர்.
மிகப் பெரிய திரை பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்த ஷ்ரத்தா கபூருக்கு மிகவும் சுலபமாக திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது .
நடிகை ஷ்ரத்தா கபூர்:
வாரிசு நடிகையான ஷ்ரத்தா கபூர் தொடர்ச்சியாக ஹிந்தி சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தற்போது பிரபலமான நடிகையாகவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையாகும் இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.
மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவர் ஆன நடிகை ஷ்ரத்தா கபூர் ஆஷிக்கி 2 திரைப்படத்தின் மூலமாக உலகம் முழுக்க ஃபேமஸ் ஆன நடிகையாக பார்க்கப்பட்டார்.
இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடித்திருப்பார். ரொமான்டிக் காதல் கதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் மொழியை தாண்டி தமிழ் தெலுங்கு உள்ளிட்ட சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்தது.
இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்றார் நடிகை ஷ்ரத்தா கபூர்.
உச்ச நடிகையாக ஷ்ரத்தா:
முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தீன் பத்தி என்ற ஹிந்தி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கை துவங்கினார் .
ஷ்ரத்தா கபூர் இளம் வயதிலேயே நாடகத்துறையில் அதிக ஆர்வம் கொண்வர். அதனால் திரைப்படத்துறைக்கு மிகவும் சுலபமாக நுழைந்தார் .
திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி பிரபலமான பின்னணி பாடகி ஆகவும் சில திரைப்படங்களுக்கு இவர் பாடல்கள் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை சதா கபூர் 37 வயதாகியும் தொடர்ந்து தனது மார்க்கெட்டை உச்சத்தில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்த அடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ஸ்ட்ரீ 2 .
இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .
அதை அடுத்து தற்போது வெளிவந்திருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலில் மிகப்பெரிய சாதனையும் படைத்தவருகிறது.
இதுவரை உலக அளவில் கிட்டத்தட்ட ரூபாய் 250 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது .
இதனால் ஷ்ரத்தா கபூரின் மார்கெட் மீண்டும் உச்சத்தை தொட்டிருக்கிறது. இப்படி இந்திய அளவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாகவும் மிகவும் க்யூட்டான நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஷ்ரத்தா கபூர்.
காதலை நிராகரித்த பிரபல நடிகர்:
தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய காதலை நிராகரித்தது குறித்து பேசி இருக்கிறார்.
ஆம் நான் சிறுவயதாக இருந்தபோது எனக்கு 8 வயது இருக்கும். என்னுடைய அப்பாவின் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்வது வழக்கம்.
அப்பா என்னை கூடவே அழைத்துக் கொண்டு செல்வார். அப்போது வருண் தவானும் அவருடைய தந்தையோடு சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார் .
வருண் தாவனின் அழகை பார்த்து நான் மயங்கி விட்டேன். அப்போது வெறும் 8 வயது தான் எனக்கு. அவரிடம் சென்று என்னுடைய காதலை தெரிவித்தேன் .
ஆனால், அவரோ என்னுடைய காதலை ஏற்க மறுத்து நோ சொல்லிவிட்டார் என்று கூறி இருக்கிறார். தற்போது நடிகை ஷ்ரத்தா கபூர் பலகோடி ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.