மணி பார்க்கும் கடிகாரம்.. வாஸ்துபடி வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்..? – இதோ விடை!

ஒவ்வொரு வீட்டிலும் ஹால், சமையலறை போன்ற இடங்களில் கடிகாரம் இல்லாமல் இருக்காது. ஆனால் தற்போது இந்த கடிகாரங்களின் பயன்பாடு சற்று குறைந்துவிட்டது.

செல்போன்களில் அதிக அளவில் நேரத்தை நாம் பார்த்தாலும் வீடுகளில் அலங்கார பொருளாக இந்த கடிகாரம் திகழ்கிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும்  இல்லை.

எனவே வீட்டில் கடிகாரத்தை மாட்டும் போது சரியான திசையில் மாட்டினால் எந்த குழப்பங்களும் ஏற்படாது. அதை விடுத்து வேண்டாத இடத்தில் மாட்டும் போது எதிர்மறை ஆற்றல்கள் பெருகி குடும்பத்தில் அமைதியின்மையும் குடும்பத்து வருமானமும் பாதிக்கப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

வாஸ்து முறைப்படி அது முற்றிலும் உண்மையானது. எனவே கடிகாரத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் எந்த திசையில் வைக்க கூடாது என்பது பற்றி விரிவாக இப்போது பார்க்கலாம்.

பொதுவாக கடிகாரத்தை வடக்கு பகுதியில் வைப்பது தான் உத்தமமானது. இதன் மூலம் குடும்பத்தில் செல்வ அபிவீர்த்தி உண்டாகும். ஏனெனில் வடக்கு திசையானது குபேரனின் திசையாகும்.குபேர கடவுள் குடும்பத்தில் இருக்கும் நிதி நிலை பிரச்சனைகளை சரி செய்து நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்துவார்.

 ஒருவேளை உங்களால் உத்தமமான வடக்கு திசையில் உங்கள் கடிகாரத்தை மாற்ற முடியாவிட்டால் மத்திம பலனை கொடுக்கக்கூடிய கிழக்கு திசையில் வைக்கலாம்.

 கிழக்கு திசையானது தேவர்களின் தலைவனான இந்திரனின் திசை என்பதால் உங்கள் குடும்பம் செழிப்பாக இருக்க இது உதவும்.

 மேற்கு திசையில் உங்கள் கடிகாரத்தை மாட்டும் போது எந்த திசை வருணனுக்கு உரிய திசை என்பதால் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையை உங்களுக்கு இது ஏற்படுத்தித் தரும்.

 மீதம் இருக்கக்கூடியது தெற்கு திசை இந்த தெற்கு திசையில் நீங்கள் கடிகாரத்தை மாற்றுவதை அறவே தவிர்க்க வேண்டும். அப்படி மாட்டினால் குடும்பத்தில் விபரீதமான பிரச்சனைகள் அதிகரிக்கும்.

 அதுமட்டுமல்லாமல் இந்த திசையானது எமனுக்கு உரிய திசை என்பதால் மரண அச்சம் அடிக்கடி குடும்பத்தில் ஏற்படும். மேலும் உடைந்து போன பழைய கண்ணாடியில் விரிசல் விட்டிருக்க கூடிய கடிகாரங்களை வீட்டில் மாட்டுவதை தவிர்த்து விடுங்கள்.

 இதன் மூலம் எதிர்மறை ஆற்றலை இது ஈர்க்கும் என்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும் அதுபோலவே பிரதான கதவுகளில் கடிகாரம் வைப்பது தவறானது இதுவும் எதிர்மறை ஆற்றலை வீட்டுக்குள் இழுத்து வரும் என்பதால் கதவு தயவு செய்து கடிகாரத்தை மாட்டாதீர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …