வாஸ்து பிரச்சனையா..? இந்த செடிகளை வளருங்கள்..! – வளம் பெறலாம்..!

 வீட்டு பராமரிப்பில் தற்போது வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டுக்குள் கொண்டு சேர்க்கும் வாஸ்து செடிகள் என்னென்ன என்பது தெரிந்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.

 அப்படி நீங்கள் தெரிந்து கொள்வதோடு அந்த வாஸ்து செடிகளை வீட்டில் வைத்து பராமரித்தால் கட்டாயம் ஐஸ்வர்யம் பெருகும்.

 வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்:

 லக்கி பேம்பு என்று அழைக்கப்பட கூடிய மூங்கில் செடியை நாம் வீடுகளில் வளர்ப்பதின் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பு நமக்கு கூடி வரும். மேலும் இந்த செடியானது அதிக அளவு ஈர்ப்பு திறன் கொண்டு இருப்பதால் நேர்மறையான ஆற்றலை ஈர்த்து வீட்டுக்கு நன்மை அளிக்கும்.

 துளசி செடியை வீட்டின் முற்றத்தில் வைத்து வழிபடுவதோடு மட்டுமல்லாமல் இதன் மூலம் காற்று சுத்திகரிப்பாவதோடு அதிக அளவு ஆக்சிஜன் கிடைப்பதால் வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமான காற்றினை சுவாசிப்பதால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

இதனை வடக்கு மற்றும் வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் இந்த துளசி செடிகளை வைக்கலாம். தெற்கு திசையில் மட்டும் துளசியை வைக்கக் கூடாது.

மருத்துவ தன்மை நிறைந்த கற்றாழை செடி காற்றினை தூய்மைப்படுத்த உதவி செய்கிறது. அதிகளவு நீர் இல்லை என்றாலும் நீண்ட நாள் தாக்கு பிடித்து பசுமையாக வளரக்கூடிய செடியை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்திருப்பதன் மூலம் குடும்ப நபர்களின் நல்வாழ்வு அபிவிருத்தி ஆகிறது.

அமைதி லில்லி என்று அழைக்கக்கூடிய இந்தச் செடி பெயரிலேயே அமைதியை கொண்டிருப்பதால் இல்லத்தில் அமைதி நிலவ இந்த செடியை நீங்கள் வளர்க்கலாம். அதுவும் இந்த செடியை உங்கள் படுக்கை அறையில் வளர்ப்பது மிகவும் நல்லது.

மேற்கூறிய செடிகளை நீங்கள் உங்கள் வீட்டுக்குள் வளர்த்துப் பாருங்கள் அல்லது வீட்டுக்கு வெளியேயும் வளர்த்தாலும் தவறில்லை.

 ஆனால் குறிப்பிட்ட திசைகளில் குறித்த படி நீங்கள் வளர்ப்பதின் மூலம் உங்கள் வீட்டில் செல்வாக்கு, செல்வம் போன்றவை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version