பொதுவாகவே குடும்பத்தில் இருக்கும் நபர்கள் அனைவருக்குமே அவர்களின் வீட்டில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க நீங்கள் இந்த வாஸ்து சிலைகளை வாங்கி வைத்தாலே போதும். நீங்கள் நினைப்பது கட்டாயம் நடக்கும்.
இந்த சிலைகளை வைப்பதின் மூலம் பணப்புழக்கம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டையும் அழகாகவும் எடுப்பாகவும் பலர் மத்தியில் எடுத்துக்காட்டும்.
வீட்டை அலங்கரிக்கக் கூடிய பணியில் இருக்கக்கூடிய நீங்கள் நான் கூறுகின்ற சிலைகளை வாங்கி வைத்தால் போதுமானது. அதுமட்டுமல்லாமல் வீட்டுக்குள் உள் அலங்காரங்களை நீங்கள் செய்வதால் பார்ப்பதற்கு உங்கள் வீடு பளிச் சென்று பலரின் மனதில் அப்படியே பதியும்படி இருக்கும்.
வீட்டில் இருக்கும் ஹாலில் பிள்ளையார் சிலையை வைக்கலாம் அல்லது முன் பகுதியில் பிள்ளையார் சிலையை வைப்பது மிகவும் நல்லது. அதிலும் பித்தளையில் செய்த பிள்ளையார் சிலை என்றால் அது கூடுதல் சிறப்பை வீட்டுக்கு கொடுக்கும்.
நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் பிரச்சனைகள் இருந்தால் அந்த பிரச்சனைகள் உங்களை விட்டு வெளியேறுவதோடு அதிக பணப்புழக்கம் ஏற்படும்.
வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷத்தை கூட இந்த பித்தளை பிள்ளையார் சிலை நீக்கும் என்பதால் நீங்கள் வீட்டு வாசலில் முன் வைப்பது மிகவும் நல்லது.
மேலும் வீட்டுக்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க நீங்கள் உலோகத்தால் ஆன யானை சிலையை எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைக்கலாம். இது உங்களுக்கு லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்துவதோடு செல்வ அபிவிருத்தியையும் கொடுக்கும்.
அதுபோலவே பசு மாட்டின் சிலையை உங்கள் பூஜை அறையில் வைப்பதின் மூலம் லஷ்மி கடாட்சம் ஏற்படுவது போல அனைத்து தெய்வங்களும் வாசம் செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கும்.
நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த பசுவின் சிலையை கட்டாயம் நீங்கள் உங்கள் வீட்டில் வைத்துப் பாருங்கள்.
நாராயணனின் அவதாரமாக கருதக்கூடிய தசா அவதாரத்தில் வரும் ஆமை சிலையை வீட்டில் வைப்பது மங்களகரமான சக்தியை தரும். இந்த ஆமை சிலையை நீங்கள் வடக்கு திசையில் வைப்பதின் மூலம் எண்ணற்ற நேர்மறை ஆற்றல்களை பெறுவதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெற முடியும்.
அது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் குதிரை சிலையை வைப்பது மிகவும் நல்லது. இது நல்ல முன்னேற்றத்தை தொழிலில் ஏற்படுத்திக் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் ஓடும் குதிரையின் சிலையானது நமக்கு வலிமையை ஏற்படுத்தும் விதத்தில் மனதை மாற்றங்களை ஏற்படுத்தும்.
எனவே இந்த சிலையை வடக்கு திசையில் வைப்பது மூலம் நிதி நிலைமை ஏற்படுவதோடு விரைந்து எந்த பணியையும் செய்து முடிக்க கூடிய மனநிலையை ஏற்படுத்தித் தரும்.
நீங்கள் மேற்கூறிய இந்த சிலைகளை உங்கள் வீட்டில் வைத்து பாருங்கள் கட்டாயம் மாற்றம் தெரியும் அப்படி தெரிந்தால் அந்த மாற்றங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே.