சிட்டிசன் பட ஹீரோயின் பூக்காரி வசுந்தரா தாஸ் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

வசுந்தரா தாஸ் நடிகை மட்டுமல்ல, சிறந்த பாடகியாகவும் தன்னை நிரூபித்திருக்கிறார். அவரது அழகு தோற்றத்தில் மட்டுமல்ல, குரலிலும் நிறைந்து காணப்படுகிறது.சி்ட்டிசன் படத்தில், அஜித்குமாரை துரத்தி, துரத்தி நடிக்கும் கேரக்டரில் நடித்திருப்பார் வசுந்தராதாஸ். இப்படத்தில், அஜித்குமார் இவருடன், பாடல் காட்சிகளில் மிக நெருக்கமாய் நடித்ததால், இருவருககும் காதல் என்ற கிசுகிசு கிளம்பியது குறி்ப்பிடத்தக்கது. அதிலும் ஷாலினியை விவாகரத்து செய்துவிட்டு, வசுந்தரா தாசை அஜித் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக எல்லாம் வதந்தி கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால், அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வசுசுந்தரா தாஸ் ேஹராம் படத்தில்தான் அறிமுகம் ஆனார். அதனால், கமலின் கண்டுபிடிப்பு என சொல்லலாம். இளம் வயது மாமியாக, அந்த படத்தில் அசத்தினார் வசுந்தரா. ஆனால், சிட்டிசன், ேஹராம் படங்களை அடுத்து, வேறு படங்கள் எதுவும் இவருக்கு அமையவில்லை. ஆனால், இந்தி,மலையாளம் படங்களில் அதிகளவில் நடித்தார்.

ஆனால், அப்போதும் தமிழில் வாய்ப்புகள் தேடி வரவில்லை. மற்ற மொழி படங்களில் நடித்தால், வருமானம் கிடைக்குமே தவிர, தமிழில் நடித்தால் மட்டுமே ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும், பட வாய்ப்புகளும் குவியும், சம்பளமும், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப அதிகரிக்கலாம். ஆனால், வாய்ப்புகளுக்காக மட்டுமே மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தால் பெரிய அளவில் சாதிக்கவும் முடியாது.

மக்கள் மத்தியிலும் நல்ல அறிமுகத்தை பெற முடியாது என்பது, வசுந்தரா தாஸ்க்கும் மிக பொருந்தும்.இவர் நல்ல பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் இடம்பெற்ற ‘ஷக்கலக்க பேபி’ பாடலை பாடியது வசுந்தரா தாஸ்தான், அர்ஜூன் நடித்த ரிதம் படத்தில், அய்யோ பத்திக்கிச்சு பாடலை பாடியதும் இவர்தான். சிட்டிசன் படத்திலும், இவர் 2 பாடல்கள் பாடி இருக்கிறார்.

இவர்,தமிழ் படங்களில் இல்லா விட்டாலும் சோஷியல் பக்கங்களில் செம ஆக்டிவ்வாக இருக்கிறார். தொடர்ந்து தனது படங்களை, இயற்கை காட்சிகளை, பிடித்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இவர், ராபர்ட் நரேன் என்ற தனது நீண்ட நாள் காதலரை, 2012 ல் திருமணம் செய்துகொண்டார். இவர் டிரம்ஸ் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை வசுந்தரா தாஸ் அப்டேட் செய்துள்ளார். இயற்கை காட்சிகள் சிலவற்றை, தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …