“சப்புக்கொட்டி சாப்பிட அசத்தலான வாழைப்பூ கிரேவி..!” – இப்படி ஒரு முறை செய்யுங்க..!!

வாழைப்பூ சமையல் என்பது இப்போது மறந்து விட்டது என்று கூறலாம்.எனினும் சத்து நிறைந்த வாழைப்பூவை பல வகைகளில் உணவுகளில் சேர்த்து வருவதின் மூலம் எண்ணற்ற நன்மைகளைத் பெற முடியும்.

 அந்த வரிசையில் இன்று வாழைப் பூவை கொண்டு செய்யக்கூடிய ஒரு அற்புதமான ரெஸிபியை பார்க்கலாம். இந்த ரெசிபி செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.

வாழைப்பூ கிரேவி செய்ய தேவையான பொருட்கள்

1.சுத்தம் செய்யப்பட்ட வாழைப்பூ ஒன்று

2.சின்ன வெங்காயம் 10

3.காய்ந்த மிளகாய் ஐந்து

4.பூண்டு ஐந்து பல்

5.மஞ்சத்தூள் ஒரு சிட்டிகை

6.சீரகம் அரை டேபிள் ஸ்பூன்

7.கரம் மசாலா அரை டேபிள் ஸ்பூன்

8.கொத்தமல்லி

9.கருவேப்பிலை ஒரு கொத்து

10.எலுமிச்சம் பழம் அளவு புளி

11.தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் நீங்கள் கிரேவி செய்வதற்கு உரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு வாழைப்பூவில் நரம்புகளை நீக்கி நீங்கள் சுத்தம் செய்து இருந்தால் அவற்றை கரைபடாமல் இருப்பதற்காக மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் புளியை நன்கு கரைத்து புளி கரைசலை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.இனி நீங்கள் மசாலாவுக்கு தேவையான காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து தனியாக ஒரு தட்டத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து போதுமான அளவு எண்ணெயை வைத்து சூடாக்கவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் சீரகம், வெங்காயம், கருவேப்பிலையை சேர்த்து தாளித்து விடவும். வெங்காயம்  பொன் நிறம் போல் மாறியதும் அதில் வாழைப்பூ உப்பு போன்றவற்றை போட்டு நன்கு கிளறி விடவும்.

இதனை கிளறிய பிறகு தேவையான அளவு மஞ்சள் தூள், கரம் மசாலா இவை இரண்டையும் போட்டு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை வதக்குங்கள். மசாலாவின் பச்சை வாசம் நீங்கும் வரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

 அதனால் அடுத்து புளிக்கரைசலை இதில் கொட்டி கிளறி கொதிக்க விடவும். இதனை அடுத்து நீங்கள் சேர்த்து இருக்கும் எண்ணெய் பிரிந்து அந்த கிரேவியிலிருந்து வெளிவரும் வரை நன்கு கொதிக்க விடவும்.

 கிரேவி நன்கு கொதி கூடிய நிலையில் எண்ணெய் வெளிவரக்கூடிய பக்குவத்தில் நீங்கள் வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து அடுப்பை ஆப் பண்ணி விடுங்கள். இப்போது சுவையான வாய்ப்பு கிரேவி தயாராக உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …