“ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு தக்காளி ரசம்..!” – எப்படி செய்யுங்க..!

வாழை குடும்பத்தை பொறுத்தவரை எல்லா பாகங்களுமே சமையலுக்கு பயன்படுகிறது. குறிப்பாக வாழைத்தண்டு, வாழைக்காய், வாழைப்பழம், வாழைப்பூ என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில்  வாழைத்தண்டை கொண்டு ரசம் வைத்து சாப்பிடுவதால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் அத்தனையும் அடியோடு மறைந்து போகும்.

மேலும் ரசம் என்றாலே அது ஆரோக்கியத்திற்கு உரியது. எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் ஜீரண சக்தியை கொடுக்க வல்லது.அப்படிப்பட்ட வாழைத்தண்டு தக்காளி ரசத்தை எப்படி செய்வது என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

வாழைத்தண்டு தக்காளி ரசம் வைக்க தேவையான பொருட்கள்

1.வாழைத்தண்டு ஒரு சிறு துண்டு

2.தக்காளி இரண்டு

3.மிளகு ஒரு டீஸ்பூன்

4.சீரகம் ஒரு டீஸ்பூன்

5.கருவேப்பிலை ஒரு கொத்து

6.எலுமிச்சை சாறு சிறிதளவு

7.பூண்டு 15 பல்

8.மஞ்சத்தூள் கால் டீஸ்பூன்

9.உப்பு தேவையான அளவு

10.கொத்தமல்லி இலை சிறிதளவு

11.தண்ணீர் தேவையான அளவு

தாளிக்க

12.எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

13.பெருங்காயத்தூள்

14.வெந்தயம்

15.கடுகு

16.காய்ந்த மிளகாய் 3

செய்முறை

முதலில் வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து அதன் சாரை மட்டும் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்தச் சாறுடன் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து வழக்கம்போல் மிக்ஸி ஜாரில் பூண்டு, கருவேப்பிலை, மிளகு, சீரகம் போன்றவற்றை கொர கொர என்று அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு,மஞ்சள் பொடி ரசத்துக்கு தேவையான தண்ணீரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலையை போட்டு பொரிக்க விடவும். இது நன்கு பொரிந்த பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரை அப்படியே ஊற்றி விடவும்.

ரசம் பொங்கி வரக்கூடிய சமயத்தில் நீங்கள் தேவையான அளவு பெருங்காயத் தூளை சேர்த்து கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை அணைத்து விடவும். இப்போது சூப்பரான சுவையான வாழைத்தண்டு தக்காளி ரசம் தயார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …