“இல்லத்தரசிகள் பயன்படுத்த எளிமையான வீட்டு குறிப்புகள்..!” – நீங்களும் பயன்படுத்தலாம்..!

வீட்டு குறிப்புகள்:இல்லத்தில் தானே இல்லத்தரசிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன வேலை என்று யாரும் இனிமேல் கேட்டு விடாதீர்கள். ஆபிஸ் சென்று வேலை செய்பவர்களை விட இல்லத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்ப்பவர்களின் வேலை பளு கூடுதலாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அவர்களுக்கு நீங்கள் முடிந்தால் உதவி செய்யுங்கள். அந்த வகையில் இன்று இந்தப் பதிவில் இல்லத்தரசிகளுக்கு தேவையான எளிய வீட்டு குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

home Tips

இல்லத்தரசிகளுக்கான எளிமையான வீட்டு குறிப்புகள்

வெண்டைக்காயை சந்தையிலிருந்து வாங்கி வந்தால் உடனே சமைத்து விட வேண்டும். இல்லை என்றால் அது பிரிட்ஜில் வைத்தால் கூட முற்றி விடக் கூடிய நிலை ஏற்படும். அப்படி உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கி வரும் வெண்டைக்காய் முற்றாமல் இருக்க அதன் காம்பு பகுதி மற்றும் மேல்பகுதியை சிறிதளவு வெட்டி வைத்து பாருங்கள். எத்தனை நாளானாலும் வெண்டைக்காய் முற்றிவிடாமல் இருக்கும்.

மல்லிகை பூவை அழகாக கட்டி வைத்தால் மட்டும் போதாது. அதை பாதுகாக்க ஒரு ஸ்டீல் பாக்ஸில் நீங்கள் அப்படியே போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் ஒரு வாரமானாலும் பூ அப்படியே வாடாமல் இருக்கும்.

home Tips

இந்தக் கோடையில் அதிக அளவு அனைவருக்குமே தாகம் எடுக்கும் அப்படி தாகம் எடுக்கக் கூடியவர்கள் மலை நெல்லிக்காயை மிக்ஸியில் அடித்து வடிகட்டி ஒன்றை லிட்டர் தண்ணீரில் கலந்து கொண்டு கோடை காலத்தில் தாகம் ஏற்படும் போது குடித்தால் உடல் அசதியும் ஏற்படாது, அதிக அளவு தாகமும் ஏற்படாது.

கீரை வாடி விடாமல் இருக்க வேரோடு அப்படியே இருந்தால் நீங்கள் அதை ஒரு டம்ளர் நீரில் வேர் மட்டும் மூழ்கி இருக்கும்படி வைத்துவிட்டால் கீரை வாடாமல் இருக்கும்.

home Tips

உங்கள் வீட்டில் இருக்கும் எலிகளை விரட்டியடிக்க புதினா இலையை பயன்படுத்தலாம். புதினா எண்ணெய் அல்லது புதினா வாசம் எலிக்கு பிடிக்காது.எனவே எலி வரும் இடங்களில் அவற்றை வைத்து விடுங்கள் கட்டாயம் எலிகள் ஓடிவிடும்.

home Tips

இது போலவே சமையல் அறைக்கட்டுகளில் இருக்கக்கூடிய கரப்பான் பூச்சிகளை வெளியேற்ற மிளகுத்தூள், வெங்காய, பூண்டு பேஸ்ட் இவற்றை தண்ணீர் கலந்து தெளித்து விட்டால் போதும் தலை தெரிந்து கரப்பான் ஓடி விடும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …