கால்சியம் குறைப்பாட்டை இப்படியும் தடுக்கலாம்..! – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

உடல் ஆரோக்கியத்திற்கு கால்சிய சத்து கட்டாயம் தேவை. கால்சிய சத்து இருக்கும் பட்சத்தில் தான் எலும்புகள் உறுதியாக உடலுக்கு உரிய கட்ட அமைப்பை நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கும்.வீகன் உணவு-களை அதிகமாக எடுத்துக் கொள்வதின் மூலம் கால்சிய சத்து கிடைக்கும்.

 சமீப காலமாக இந்தியர்களுக்கு அதிக அளவு கால்சிய குறைபாடுகள் ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம் கூறியுள்ளது. இதனை அடுத்து இவர்களது எலும்புகள் பலவீனமாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரோபோரோசிஸ் என்ற எலும்புகளில் துளை ஏற்படக்கூடிய நோயும் அதிகமாக ஏற்படுகிறது.

குறிப்பாக இந்திய பெண்களிடம்  அதிகளவு இந்த கால்சிய குறைபாடு தற்போது நிலவி வருகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு 1000  மில்லி கிராம் அளவு உடலுக்கு கால்சிய சத்து அவசியம் தேவை என்று ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத்  கூறியிருக்கிறார்.

 கால்சிய சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டாலும் சிலருக்கு கால்சியமானது சிறுநீரகத்தின் வழியாக வெளியேறி விடுவதால் போதுமான அளவு கால்சியம் அவர்களுக்கு கிடைக்காது. எனவே வீகன் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதின் மூலம் நமக்கு தேவையான கால்சிய சத்து அதிகளவு கிடைக்கும்.

கால்சிய சத்தினை அள்ளி தரும் பால்:

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிகளவு கால்சியம் இருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். உதாரணமாக ஒரு கப் பாலில் 290 மில்லி கிராம் அளவு கால்சியம் இருக்கிறது. எனவே பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை அனைவரும் தினமும் சாப்பிடுவதின் மூலம் கால்சியம் நமக்கு கிடைக்கும்.

கால்சிய சத்து நிறைந்த வீகன்:

கால்சிய சத்து தாவரங்களிடமிருந்து அதிக அளவு நமக்கு கிடைக்கிறது. இதைத்தான் நாம் வீகன் உணவுகள் என்று அழைக்கிறோம். குறிப்பாக கால்சியத்தானது எள், சோயா, வெண்டைக்காய், புடலை, கடுகுக் கீரை ஆகிய உணவுகளில் அதிகமாக காணப்படுகிறது.

 இவற்றை அன்றாட உணவில் நாம் சேர்த்துக் கொள்வதின் மூலம் எலும்புகளுக்கு தேவையான அடிப்படை கால்சியம் கிடைத்து விடுகிறது.

இந்த கால்சிய சத்தை கிரகித்துக் கொள்ள இணை ஊட்டச்சத்து ஒன்று தேவைப்படுகிறது. அதுதான் வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து தான் நாம் இதனைத் பெற முடியும்.

எனவே கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் கூட சூரிய ஒளி உடலில் படவில்லை என்றால் கட்டாயம் உங்களுக்கு கால்சிய  பற்றாக்குறை ஏற்படும். எனவே அவசியமாக நீங்கள் சூரிய ஒளி உள்ள நேரங்களில் சில நிமிடங்கள் ஆவது நடப்பது நல்லது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version