“பங்குனியில் இத பயிர் செய்யுங்க..!” விளைச்சல் ரெட்டிப்பா கிடைக்க..!

விவசாயத்தில் எண்ணற்ற யுத்திகள் இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் முன்னோர்கள் வகுத்து சென்ற கால நிலைகளை உணர்ந்து காலத்துக்கு ஏற்றபடி பயிர்களை பயிர் செய்யும்போது நமக்கு விளைச்சல் இரட்டிப்பாக கிடைக்கும்.

அந்த வகையில் பங்குனி மாதத்தில் நமது முன்னோர்கள் பயிர் செய்த சில முக்கிய செடிகளை நாம் வீட்டுத் தோட்டத்தில் பயிர் செய்வதின் மூலம் உங்களுக்கு எப்போதும் கிடைப்பதை விட இரட்டிப்பாக விளைச்சல் கிட்டும்.

அப்படி பங்குனி மாசத்தில் நீங்கள் பயிரிட்டு விளைச்சலை அதிகளவு எடுக்கக்கூடிய செடிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பங்குனியில் பயிரிட வேண்டிய செடிகள்

பங்குனி மாதத்தில் நீங்கள் வெண்டைக்காய் செடியை விதைப்பது மிகவும் நல்லது. இது ஒரு குறுகிய கால பயிராக இருப்பதால் நீங்கள் குறுகிய காலத்திலேயே அதிக அளவு வருமானத்தை பெறுவதோடு இந்த செடியை இந்த மாதத்தில் நீங்கள் பயிர் செய்வதால் உங்கள் விளைச்சலும் இரட்டிப்பாகும்.

கொடி வகைகளைப் பொருத்தவரை நீங்கள் பாகற்காயை பங்குனி மாதம் பயிரிடுவதின் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்கும். மேலும் சந்தையில் பாகற்காயின் தேவை அதிகரித்து இருப்பதால் நீங்கள் பங்குனி மாதத்தில் பாகற்காய் கொடியை உங்கள் வீட்டில் படர விட்டு அதிகளவு பாகற்காய் உற்பத்தி செய்யலாம்.

முருங்கைச் செடியை உங்கள் வீட்டிலோ தோட்டத்திலோ வைத்து வளர்ப்பதின் மூலம் பங்குனி மாதம் அதிக அளவு வருமானத்தை இது பெற்று தரும். தண்ணீர் வசதி குறைவாக இருப்பவர்கள் முழங்கையை பயிரிட்டு நிறைவான வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.

குறைந்த அளவே நீர் தேவையை வைத்து நல்ல அளவு மகசூலை கொடுக்கும் கொத்தவரையை பயிரிட்டு நீங்கள் விளைச்சலை அதிகப்படுத்திக் கொள்ளலாம். சில சமயம் இந்த கொத்தவரையில் பூச்சி தொல்லைகள் ஏற்படும். அதை தவிர்த்து விட்டால் உங்களது விளைச்சல் அதிகரித்து நல்ல விதமாக நீங்கள் பணப்பயனை இதன் மூலம் அடைய முடியும்.

எனவே மேற்கூறிய செடிகளை இந்தப் பங்குனி பட்டத்தில் உங்கள் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது உங்கள் தோட்டத்திலோ பெரிய அளவு பயிர் செய்து உங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …