வீட்டுத் தோட்டத்தில் உணவிற்கு கூடுதல் சுவை சேர்ப்பதோடு அதிக சத்துக்களையும் கொடுக்கக்கூடிய காய்கறிகள் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது. குறிப்பாக சைவ உணவை மட்டும் உண்டு வாழ்பவர்களுக்கு காய்கறிகளின் அவசியம் அபரிமிதமானது.
அந்த வகையில் ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி ஒரு நபர் ஒரு நாளைக்கு 120 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
ஆனால் காய்கறி பற்றாக்குறை தான் தற்போது நிலவுகிறது. ஒரு நபருக்கு 120 கிராம் அளவுக்கு மட்டும் தான் காய்கறிகள் கிடைக்கிறது. அதுவும் சுத்தமான காய்கறியா என்றால் இது கேள்விக்குறியாய் உள்ளது.
மேலும் இன்று வளர்க்கப்படக்கூடிய காய்கறிகள் அனேகமாக அதிகளவு கெமிக்கல் கலவைகளாக வெளிவருவதால் நம்மை சிறுக சிறுகக் கொள்ளும் நஞ்சுள்ள காய்களாகவே அவை விளங்குகிறது.
எனவே பூச்சிக்கொல்லிகள், கெமிக்கல் கலவைகள் இல்லாத காய்கறிகளை நமது வீட்டு சிறிய தோட்டத்தில் வளர்ப்பதின் மூலம் எண்ணற்ற உடல் ரீதியான நன்மைகளையும் பொருளாதார சிக்கல்களையும் நாம் சீர் செய்ய முடியும்.
வீட்டில் இருக்கும் இடத்தை பொறுத்தே நாம் அதை திட்டமிட்ட முடியும். இருக்கும் இடம் சிறிது என்றாலும் அதை மிக நல்ல முறையில் மண்வெட்டியால் உழுது சமன்படுத்தி மாட்டுச்சாணம் ஆட்டுத்தொழுவும் இவற்றைப் போட்டு நாம் நிலத்தை சீர் செய்யலாம். அப்படி சிறிதளவு நிலம் இல்லாதவர்கள் மாடி தோட்டத்தை அமைத்து பயன்பெறலாம்.
வீட்டுத் தோட்டத்திற்கு ஏற்ற செடிகள்:
💐 வீட்டுத் தோட்டத்தில் இருக்கின்ற குறைவான இடம் என்றாலும் நிறைவாக நாம் பயிர் செய்ய முடியும். அதில் நாம் தக்காளி, கத்திரிக்காய் மிளகாய் செடிகளை மிக நல்ல முறையில் வளர்க்கலாம்.
💐 அதுமட்டுமில்லாமல் நீங்கள் இரண்டு பாத்திகளில் கீரை, புதினா, கொத்தமல்லி போன்றவற்றை மிக சூப்பராக வளர்த்து உங்கள் வீட்டு சமையல் அறையில் நீங்கள் இவற்றை உணவாக சமைக்க முடியும்.
💐 மேலும் கொடி வகைகளை பொறுத்தவரை பூசணிக்காய், அவரைக்காய் போன்ற கொடிகளை வளர்த்து பயன்பெறலாம்.
மேலும் இந்த கொடியில் படக்கூடிய கொடி வகை தாவரங்களுக்கு பந்தல் அமைத்துக் கொடுக்கலாம் அல்லது மொட்டை மாடியில் அவற்றை எடுத்துச் செல்லும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டால் மொட்டை மாடியில் நீங்கள் வெயில் ஏற்படுவதை தவிர்த்து குளிமையும் உண்டாக்க முடியும் அல்லது வீட்டின் கூரைமேல் எந்த கொடி தாவரங்களை பரவ விட்டும் வளர்க்கலாம்.