“ஈசன் குடிகொண்டுள்ள வெள்ளிங்கிரி மலை ..!” – வியக்க வைக்கும் தென் கைலாயத்தின் சிறப்புகள்..!!

 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று ஈசனை வழிபட வழிபடாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு சிவனை  வழிபட்டு தழைத்து உள்ளது. பக்தர்களுக்கு மிக எளிதில் இறங்கி வரம் கொடுக்கும் கடவுளான  பரமேஸ்வரன் குடியிருக்கும் தென் கைலாயமாம் வெள்ளிங்கிரி மலையின் சிறப்புகள் என்னென்ன என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளிங்கிரி மலையானது, பூண்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. பசுமைக்கு பஞ்சம் இல்லாத அழகிய மரங்களோடு இயற்கையோடு இணைந்து இருக்கக்கூடிய இந்த மலையில் இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லை என்று கூறலாம்.

 மேற்கு தொடர்ச்சி மலையின் மத்தியில் அமைந்திருக்கும் எந்த சிவதலமான வெள்ளிங்கிரி மலையில் எண்ணற்ற அற்புதங்கள் நிறைந்துள்ளது.

 இந்த மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்பவர்கள் சுமார் 50 கிலோ மீட்டர் அளவு பயணம் மேற்கொண்டால் மட்டுமே இந்த மலையில் இருக்கின்ற ஈசனை தரிசித்து  அருளை பெற முடியும்.

 அப்படி மலை மீது ஏறி சென்று அப்பனை வழிபட முடியாதவர்கள் மலை அடிவாரத்தில் இருக்கின்ற கோயிலில் இருக்கும் சுவாமியை தரிசித்து திரும்புகிறார்கள்.

மேலும் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலையில்  வாசம் செய்து வரும் வெள்ளிங்கிரி ஆண்டவர் ஒரு சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கிறார். சிவபெருமான் நீர், நிலம், அக்னி, வாயு, ஆகாயம் என பஞ்சபூதங்களுக்கும் ஒருங்கி அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக இந்த வெள்ளிங்கிரி மலையில் அருள் பாலிக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவர் இருக்கிறார்.

 மேலும் இங்கு இருக்கக்கூடிய ஆறடி அகலம் உள்ள சிறிய குகையில் தான் இவர் நமக்கு காட்சி தருகிறார். ஏழுமலைகள் என்றாலே நினைவுக்கு வருவது திருப்பதி தான். ஆனால் சைவர்களுக்கு ஏழு மலைகளில் தரிசனம் தரக்கூடிய சிவபெருமான் இந்த தளத்தில் தான் அருள்பாலிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

 உடல் பலம் கொண்டவர்கள் மட்டுமே இந்த மலைகளில் பயணத்தை மேற்கொண்டு வெள்ளிங்கிரி நாதனின் அருளைப் பெற முடியு.ம் அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது இங்கு இருக்கக்கூடிய மூலிகைகளின் மூலம்  எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தை உங்கள் உடலுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

 அது மட்டுமல்லாமல் அங்குள்ள காற்றை சுவாசிப்பதால் எண்ணற்ற வியாதிகள் குணமாகும். ஏனெனில் நிறைய மூலிகைகள் நிறைந்த காடு என்பதால்  மூலிகையின் வாசம் கலந்திருக்கும் காற்றை சுவாசிக்கலாம்.

மேலும் இங்கு சுனைகளில் வரும் நீருளையும் மருத்துவ குணம் நிறைந்து உள்ளதால் அந்த நீரை பருகுவோர்க்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் ஆயுள் விருத்தியும் உண்டாகும். நீங்கள் செல்லும் வழியில் பாம்பாட்டி சித்தரின் குகையை பார்க்கலாம்.

 40 வயதை கடந்தவர்கள் வெள்ளியங்கிரி மலையை ஏறுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை .எனினும் மன உறுதியோடு இறையருள் இருந்தால் கண்டிப்பாக இந்த மலையை கடந்து நீங்கள் ஈசனை உங்களால் தரிசிக்க முடியும்.

இந்த மலைக்கு பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பக்தர்கள் அதிகமாக வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் சித்ரா பௌர்ணமி, சிவராத்திரி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வெள்ளிங்கிரி நாதரை வணங்குவார்கள்.

 இந்த மலையை ஏறுவதற்கு சுமார் 5 மணி நேரங்கள் பிடிக்கும். 5 மணி நேரங்கள் ஆனாலும் உங்கள் மனதை மகிழ்விக்க கூடிய வகையில் வெள்ளிங்கிரி நாதனை நீங்கள் தரிசித்தால் கோடி புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam