அந்த விஷயத்தில் கூட இரக்கப்படல..! வெங்கட் பிரபுவால் கண்ணீர் விட்ட நடிகர் ஜெய்..!

முதல் படத்திலிருந்தே தமிழ் சினிமாவில் வரவேற்பு பெற்ற இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இயக்குனர் கங்கை அமரனின் மகன் என்றாலுமே கூட வெங்கட் பிரபு அதை பயன்படுத்தி சினிமாவிற்கு வரவில்லை.

வழக்கம் போல அவரும் மற்ற இயக்குனர்கள் போல உதவி இயக்குனராகதான் தனது வாழ்க்கையை துவங்கினார். வெங்கட் பிரபுவிற்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆரம்பத்தில் இருந்து ஆசையாக இருந்தது.

ஆனால் தனது செல்வாக்கை பயன்படுத்தி இயக்குனர் ஆகாமல் ஆரம்பத்தில் இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் வெங்கட்பிரபு. இயக்குனர் பேரரசிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு

சிவகாசி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். அதற்கு பிறகு இயக்குனரான வெங்கட் பிரபு முதலில் இயக்கிய படம் சென்னை 600028. அந்த திரைப்படத்தில் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்தார் வெங்கட் பிரபு.

அந்த நடிகர்களில் பலர் இப்பொழுது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக இருந்து வருகின்றனர். அதற்கு பிறகு நடிகர் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பை பெற்றார் வெங்கட் பிரபு. அஜித்தை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் மங்காத்தா.

மங்காத்தா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபலமான ஒரு இயக்குனராக மாறினார் வெங்கட் பிரபு. அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் மங்காத்தா படத்திற்கு பிறகு பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்புகளே அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை.

அந்த விஷயத்தில் கூட இரக்கப்படல

இந்த நிலையில் ஒரு காமெடி இயக்குனராகவும் அவர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றார். பொதுவாகவே வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படங்களில் சீரியஸ் காட்சிகள் என்பது குறைவாகதான் இருக்கும் மங்காத்தா மாதிரி ஒரு சில திரைப்படங்களில்தான் கொஞ்சமாக சீரியஸ் காட்சிகளை வைத்திருப்பார்.

மற்றபடி காமெடி திரைப்படங்களை சிறப்பாக இயக்கக் கூடியவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் சமீபத்தில் மாநாடு திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்க தயாரானார்கள்.

இப்பொழுது விஜய்யை வைத்து கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த நிலையில் முதல் படத்தில் அவருக்கு நடந்த அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும்போது முதல் படத்தை இயக்கும்போது நான் மிகவும் டென்ஷனான ஒரு ஆளாக இருந்தேன். இப்பொழுது இருக்கும் வெங்கட் பிரபுவாக அப்போது இல்லை.

கண்ணீர் விட்ட நடிகர் ஜெய்

அதனால் யாரையாவது பார்த்தால் சத்தம் போட்டு விடுவேன் ஒரு முறை இப்படித்தான் படபிடிப்பு நடந்து கொண்டிருந்த பொழுது ஜெய் ஓரமாக நின்று யாரிடமோ போன் பேசிக் கொண்டிருந்தான். எனக்கு அவன் செய்வதை பார்த்ததும் கடுப்பாகிவிட்டது.

எனவே நான் சத்தம் போட்டு விட்டேன் பிறகு வந்து அந்த காட்சியை நடித்து விட்டு ஓரமாக சென்று அழத்துவங்கிவிட்டான் ஜெய். பிறகு பிரேம்ஜி என்னிடம் வந்து எதற்கு அவனைத் திட்டினாய் அவன் அழுது கொண்டிருக்கிறான். மேலும் அவன் போன் எல்லாம் பேசவில்லை அவனுக்கு தாடையில் அடிபட்டு இருந்தது.

அதை தடவி கொடுத்துக் கொண்டிருந்தான் அதனை பார்த்து நீ அவன் போன் பேசுவதாக தவறாக புரிந்து கொண்டாய் என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டு நேரில் சென்று ஜெய்யை பார்த்துள்ளார் வெங்கட் பிரபு உடனே அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதிருக்கிறார் ஜெய். அந்த நிகழ்வை பேட்டியில் கூறி இருக்கிறார் வெங்கட் பிரபு.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam